Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவனா இருந்தாலும் வெட்டுவோம்.. ஆப்கனுடன் மோதி தப்பிப் பிழைத்த பின் "தில்"ஷன் பேச்சு!

கொல்கத்தா: எந்த அணியாக இருந்தாலும் எங்களால் அந்த அணியை வெல்ல முடியும் என்று இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுடன் மோதி அயய்யோ தப்பிச்சோம்டா என்று கஷ்டப்பட்டுப் போராடி ஜெயித்த இலங்கைக்கு தற்போது தன்னம்பிக்கை கூடி விட்டதாக தெரிகிறது. அதைத்தான் தில்ஷனின் பேட்டி எதிரொலித்துள்ளது.

இப்போட்டியில் தில்ஷன் சிறப்பாக ஆடி அரை சதம் போட்டார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எங்களது அனுபவத்தை வைத்து எதையும் சாதிக்க எங்களால் முடியும் என்பதை நிரூபித்தோம் என்று கூறியுள்ளார் தில்ஷன்.

சிறப்பான டீம்

சிறப்பான டீம்

இதுகுறித்து தில்ஷன் கூறுகையில் மிகச் சிறப்பான முறையில் கடமையாற்றும் வீரர்கள் எங்களது அணியில் நிறையவே உள்ளனர். அவர்களால் எதையும் சாதிக்க முடியும்.

யாராக இருந்தாலும் வெல்வோம்

யாராக இருந்தாலும் வெல்வோம்

எங்களுக்கு எதிரில் யார் நின்றாலும் கவலை இல்லை. எந்த அணியாக இருந்தாலும்,யாராக இருந்தாலும் எங்களால் அவர்களை வீழ்த்த முடியும். எங்களது பிராண்ட் கிரிக்கெட எங்களை விட்டுப் போகவில்லை.

சீனியர்கள் பார்த்துக் கொள்வார்கள்

சீனியர்கள் பார்த்துக் கொள்வார்கள்

எந்த அணியாக இருந்தாலும் அதில் சீனியர்கள் இருப்பார்கள். அவர்கள் இருக்கும் வரை யாருக்கும் கவலை கிடையாது. யார் ஆட்டத்தைத் தொடங்கினாலும் சரி, அதை சிறப்பாக முடிக்க வேண்டியது அவசியம்.

தொடர்ந்து ஆடுவேன்

தொடர்ந்து ஆடுவேன்

எனக்கு 40 வயதாகப்போவது பெரிய செய்தி அல்ல. நான் தொடர்ந்து விளையாடும் தகுதியில் இருக்கிறேன். அதுதான் முக்கியம். நான் ஓய்வு குறித்து நினைத்துப் பார்க்கவில்லை. தொடர்ந்து எனது பேட்டிங்கை ரசித்து அனுபவித்து வருகிறேன்.

ஒரு நாள் ஓய்வு பெறுவேன்

ஒரு நாள் ஓய்வு பெறுவேன்

இருப்பினும் ஒரு நாள் நானும் ஓய்வு பெறுவேன். அந்த நாள் எப்போது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்போதைக்கு அது இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் என்றார் தில்ஷன்.

தொடர் தோல்விக்குப் பின் வெற்றி

தொடர் தோல்விக்குப் பின் வெற்றி

இலங்கை அணி சமீபத்தில் பல தோல்விகளைச் சந்தித்து விட்டது. ஆசியாக் கோப்பையில் 3 தோல்விகளைச் சந்தித்து. இந்தியாவில் டி 20 தொடரை இழந்தது. வார்ம் அப் போட்டிகளிலும் அது 2 தோல்விகளைச் சந்திக்க நேரிட்டது என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Friday, March 18, 2016, 15:51 [IST]
Other articles published on Mar 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+