For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலக கோப்பை: இலங்கை-இங்கிலாந்து இன்று மோதல்.. ரிசல்டுக்காக காத்திருக்கிறது தென் ஆப்பிரிக்கா

By Veera Kumar

டெல்லி: இன்று நடைபெறும் சூப்பர்-10 ஆட்டத்தில் இங்கிலாந்தை இலங்கை வீழ்த்தினால்தான் அரையிறுதிக்கான தங்களின் வாய்ப்பு எஞ்சியிருக்கும் என்ற சூழலில், போட்டி முடிவை தென் ஆப்பிரிக்க அணியும், அதன் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட், குரூப் 1 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

World T20: Which team will join West Indies in the semi-finals from Group 1?

இந்த பிரிவில் இருந்து அரைஇறுதிக்கு நுழைய இங்கிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இதில் ஒன்றுதான் அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில், இங்கிலாந்து- இலங்கை அணிகள் இடையே இன்று இரவு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில், மோதல் நடக்கிறது.

இங்கிலாந்து வென்றால் 6 புள்ளியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும். நடப்பு சாம்பியனான இலங்கை, தென்ஆப்பிரிக்கா வெளியேற்றப்படும். மாறாக இலங்கை அணி வெற்றி பெற்றால் 4 புள்ளியை பெறும். கடைசி வீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் அந்த அணி தகுதிபெற்று விடும்.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா வெளியேற்றப்படும். இன்றைய ஆட்டத்தில் இலங்கை வென்று கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றால் 3 அணிகள் (இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா) 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். நிகர ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும்.

எனவே இன்றைய ஆட்டம் பரபரப்பானதாக இருக்கும்.

Story first published: Saturday, March 26, 2016, 12:55 [IST]
Other articles published on Mar 26, 2016
English summary
As of now, South Africa, England and Sri Lanka, all have chance to a varying degree. The two games which are of utmost importance in Group 1 will be played between England and Sri Lanka and South Africa and Sri Lanka.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+