Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC 2025: அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியல்.. டாப் 2 வில் தமிழக வீரர் அஸ்வின்

சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் குறித்த விவரத்தை பார்க்கலாம்.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் 17 இன்னிங்ஸ்களில் 48 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

ind vs ban india bangladesh

இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் இடம் பெற்று இருக்கிறார். அவர் 21 இன்னிங்ஸ்களில் 51 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் இடம் பெற்று இருக்கிறார். அவர் 23 இன்னிங்ஸ்களில் 48 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

இந்த பட்டியலில் அஸ்வினுக்கு அடுத்ததாக முன்னேறி இருக்கும் இந்திய பந்து வீச்சாளர் பும்ரா ஆவார். அவர் ஏழாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார் பும்ரா. அதன் மூலம் 13 இன்னிங்ஸ்களில் 36 விக்கெட்களை வீழ்த்தி ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

இதே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 10வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவர் 14 இன்னிங்ஸ்களில் 31 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மற்றொரு இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 16 வது இடத்தில் இடம் பெற்று இருக்கிறார். அவர் 17 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

இதில் பும்ராவின் செயல்பாடு பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. முதல் ஆறு இடங்களில் இடம் பெற்று இருக்கும் பந்துவீச்சாளர்கள் அதிக இன்னிங்ஸ்களில் ஆடி அதிக விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர். ஆனால், பும்ரா வெறும் 13 இன்னிங்ஸ்களில் மட்டுமே ஆடி 36 விக்கெட்களை வீழ்த்தி ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

அடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவர் பங்கேற்க இருக்கும் நிலையில் அவர் முதல் மூன்று இடங்களுக்குள் நிச்சயம் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல அஸ்வினும் இன்னும் அந்த டெஸ்ட் தொடர்களில் விளையாடுவார் என்பதால் அவர் 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Sunday, September 22, 2024, 16:56 [IST]
Other articles published on Sep 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+