WTC புள்ளிப் பட்டியல் - பாகிஸ்தானுக்கு அடுத்த அடி.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பெரும் சரிவு
முல்தான்: பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி இந்த புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றுள்ளது. பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மோசமாகவே ஆடி வரும் நிலையில் அந்த அணிகளை விடவும் கீழே சரிந்து இருக்கிறது பாகிஸ்தான அணி. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியா 74.24 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா 62.50 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இலங்கை 55 68 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணியை முல்தான் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி 45.59 வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 38.89 வெற்றி சதவீதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து 37.50 வெற்றி சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 34.38 வெற்றி சதவீதத்துடன் ஏழாவது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 18.52 வெற்றி சதவீதத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 16.67 வெற்றி சதவீதத்துடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மொத்தமே ஒன்பது அணிகள் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி அதில் கடைசி இடத்தை பெற்று இருக்கிறது.
பாகிஸ்தான் அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை ஆடிய எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஆறு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. அடுத்து அந்த அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக தலா இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
அந்த ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பாகிஸ்தான் அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெறும் அணிகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications