Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்.. நேரடி தகுதி பெற வாய்ப்பு

கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிரா ஆக வேண்டிய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 74.24 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெறும் அணிகள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்திய அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்க வைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்? என்பது குறித்த புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

ind vs ban india bangladesh


இந்திய அணி அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. அதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் 3 - 0 என இந்திய அணி தொடரை வென்றால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்று விடும்.

அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெல்ல வேண்டும். அப்படி செய்தால் அடுத்து நடக்கவுள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி அதிக அழுத்தம் இன்றி விளையாடலாம். ஏற்கனவே, ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து இரண்டு முறை டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக இந்திய அணி வெற்றி பெற முயற்சி செய்ய உள்ளது.

அந்த தொடரில் இந்திய அணியால் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. அந்த வகையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பு குறித்து கவலை இன்றி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடலாம். அதே சமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்று இருக்கும்.

ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இடத்துக்கு போட்டி போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 1, 2024, 18:43 [IST]
Other articles published on Oct 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+