Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Points table - இந்தியாவுக்கே ஆப்பு வைக்கப் போகும் வங்கதேசம்? பாதாளத்திற்கு சரிந்த பாகிஸ்தான்

ராவல்பிண்டி: 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்தது. இந்த தொடரின் இரண்டு போட்டிகளையும் வங்கதேசம் வென்றது. இதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் வங்கதேசம் நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. மொத்தமே ஒன்பது அணிகள் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று இருக்கும் நிலையில் பாகிஸ்தான் எட்டாவது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இன்னும் நான்கு போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் விளையாட உள்ளது.

pakistan bangladesh

ஒருவேளை வங்கதேசம் இந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 67.50 வெற்றி சதவீதத்துடன் இந்த புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவை பின்தள்ளி முதல் இடத்தை பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்தியா தற்போது 68.52 வெற்றி சதவீதம் வைத்துள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வங்கதேசம் வெல்வது கடினமாகவே இருக்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் இந்தியா முதல் இடத்தில் உள்ளது 68.52 வெற்றி சதவீதத்தை வைத்துள்ளது இந்தியா. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. அந்த அணி 62.50 வெற்றி சதவீதம் வைத்து உள்ளது. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து 50 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடந்துள்ளது. அந்த இரண்டிலும் இந்தியா பங்கேற்று இருந்தது. ஆனால், ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. முதல் முறை நியூசிலாந்து அணியும், இரண்டாவது முறை ஆஸ்திரேலியாவும் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றன. மூன்றாவது முறையாக இந்தியா இறுதிப் போட்டிக்கு நிச்சயம் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

1. இந்தியா - 9 போட்டிகள் - 6 வெற்றி, 2 தோல்வி, 1 டிரா, 68.52 -வெற்றி சதவீதம்

2. ஆஸ்திரேலியா - 12 போட்டிகள் - 8 வெற்றிகள், 3 தோல்விகள், 1 டிரா, 62.50 - வெற்றி சதவீதம்

3. நியூசிலாந்து - 6 போட்டிகள் - 3 வெற்றிகள், 3 தோல்விகள், 50.00 -வெற்றி சதவீதம்

4. வங்கதேசம் - 6 போட்டிகள் - 3 வெற்றிகள், 3 தோல்விகள், 45.83 - வெற்றி சதவீதம்

5. இங்கிலாந்து - 15 போட்டிகள் - 8 வெற்றிகள், 6 தோல்விகள், 1 டிரா, 45.00 - வெற்றி சதவீதம்

6. தென்னாப்பிரிக்கா - 6 போட்டிகள் - 2 வெற்றிகள், 3 தோல்விகள், 1 டிரா, 38.89 - வெற்றி சதவீதம்

7. இலங்கை - 6 போட்டிகள் - 2 வெற்றிகள், 4 தோல்விகள், 33.33 - வெற்றி சதவீதம்

8. பாகிஸ்தான் - 7 போட்டிகள் - 2 வெற்றிகள், 5 தோல்விகள், 19.05 - வெற்றி சதவீதம்

9. வெஸ்ட் இண்டீஸ் - 9 போட்டிகள் - 1 வெற்றி, 6 தோல்விகள், 2 டிரா, 18.52 - வெற்றி சதவீதம்

Story first published: Tuesday, September 3, 2024, 20:19 [IST]
Other articles published on Sep 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+