Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC 2025-27: அடுத்த உலக டெஸ்ட் சைக்கிளில் இந்தியா யாருடன் மோத போகிறது தெரியுமா? ஈஸியான பாதை

மும்பை : சர்வதேச டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளை ஐசிசி அறிவித்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் இந்த தொடரில் பெறும் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணி பைனலுக்கு செல்லும்.

அந்த வகையில் 2019 -21 மற்றும் 2021 -23 ஆகிய இரண்டு சைக்கிளிலும் இந்திய அணி பைனலுக்கு சென்று சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் வந்தது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் 2023-25 மூன்றாவது சைக்கிளிலும் இந்திய அணி அபாரமாக விளையாடி இருக்கிறது.

india cricket team wtc world test championship

தற்போது இந்திய அணி எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற்று பின் மற்ற முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தால் ஹட்ரிக் முறையாக பைனலுக்கு செல்லும். இந்த தொடரிலும் இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிராக மட்டும் தோல்வியை தழுவி தடுமாறியது.

இந்தியா பைனலுக்கு செல்லும் வாய்ப்பு ஏறக்குறைய பிரகாசமாகவே இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த சைக்கிளில் இந்திய அணி யாருடன் விளையாட போகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் அதுவும் இந்திய அணிக்கு ஈசியான பாதையாகவே அமைந்து இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள் விளையாடுகிறது. இதில் இந்திய அணி குறைந்தபட்சம் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட போதுமானது. அதன் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த இரண்டில் இந்திய அணி குறைந்தபட்சம் ஒன்றிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய அணி, இரண்டுக்கு பூஜை என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும்.

அதன் பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியாவில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இதிலும் இந்திய அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கிலாவது வெல்ல வேண்டும். இதன் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் ஆணியை இந்திய அணி தங்கள் சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் எதிர்கொள்கிறது. இதிலும் இந்திய அணி முழுமையாக வெல்ல வேண்டும். இவ்வாறு முடிவுகள் அமைந்தால் இந்திய அணி மீண்டும் பைனலுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Friday, December 20, 2024, 15:17 [IST]
Other articles published on Dec 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+