WTC 2027 புள்ளி பட்டியல்.. ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடம்.. வங்கதேசம் புள்ளிகள் குறைவு
மும்பை: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன் செய்துள்ளது.
இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 64 ரன்கள் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா அணி 210 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 95 ரன்களில் ஆட்டம் இழந்தது.

இந்த சூழலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். ஆஸ்திரேலிய அணி நடப்பு சைக்கிளில் 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி 2 தோல்வி என 80 புள்ளி சதவீதத்துடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 77.77 என்ற அளவில் இருந்து தற்போது அது உயர்ந்திருக்கிறது.
வங்கதேச அணி இரண்டாவது டெஸ்டில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் அந்த அணியின் வெற்றி சதவீதம் 66.67 யிலிருந்து 55.56 வெற்றி சதவீதமாக குறைந்து இருக்கிறது. வங்கதேச அணியின் வெற்றி சதவீதம் கிட்டத்தட்ட 12 புள்ளிகளுக்கு மேல் குறைந்திருந்தாலும், அது இந்தியாவுக்கு மேலே தான் இன்னும் நான்காவது இடத்தில் நீடிக்கிறது.
இந்திய அணி 53 வெற்றி சதவீதமாக ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ஒருவேளை இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா முழுமையாக வென்றால் வங்கதேசத்தை பின்னுக்கு தள்ளி இந்திய அணி நான்காவது இடத்திற்கு முன்னேறும். தென்னாப்பிரிக்கா வெற்றி சதவீதம் 75 ஆக நீடிக்கிறது.
அந்த அணி இரண்டாவது இடத்திலும் நியூசிலாந்த அணி 72.2 என்று வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இலங்கையின் வெற்றி சதவீதம் 33 என்று அளவில் ஆறாவது இடத்திலும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகள் முறையே 7, 8 மற்றும் 9 வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications

