Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: புதிய வரலாறு.. இந்தியாவின் பிரம்மாண்ட ஐசிசி பைனல் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலியா

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியின் நீண்ட கால சாதனை ஒன்றை ஆஸ்திரேலியா முறியடித்து இருக்கிறது.

அதிக முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்ற இமாலய சாதனையை ஆஸ்திரேலியா செய்துள்ளது. இதற்கு முன் இந்தியா 13 முறை ஐசிசி இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறி இருந்தது.

ind vs aus world test championship 2025 india vs australia test match vs

இதற்கு முன் ஆஸ்திரேலியாவும் 13 முறை ஐசிசி போட்டிகளுக்கு முன்னேறி இருந்தது. தற்போது 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறியதன் மூலம் இந்தியாவை முந்தி அதிக முறை ஐசிசி இறுதி போட்டிகளுக்கு முன்னேறிய அணி என்ற சாதனையை செய்து இருக்கிறது.

தற்போது ஆஸ்திரேலிய அணி 14 முறை ஐசிசி இறுதி போட்டிகளுக்கு முன்னேறி உள்ளது. எந்தெந்த தொடர்களில் எத்தனை முறை ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இறுதி போட்டிகளுக்கு முன்னேறி உள்ளன என்பது பற்றி பார்க்கலாம். ஆஸ்திரேலியா இரண்டு டி20 உலக கோப்பை மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறி உள்ளது.

ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் போட்டி உலக கோப்பை தொடர்களுக்கு எட்டு முறை முன்னேறி உள்ளது. அத்துடன் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளுக்கும் முன்னேறி உள்ளது. இதுவரை 13 முறை அந்த அணி ஐசிசி இறுதிப் போட்டிகளில் ஆடி இருக்கும் நிலையில், அதில் பத்து முறை கோப்பையை வென்று இருக்கிறது.

தற்போது 14வது முறையாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதிலும் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை நான்கு முறை ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதி போட்டிகளுக்கு முன்னேறி உள்ளது. மூன்று முறை டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிகளுக்கு முன்னேறி இருந்தது.

இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும், நான்கு முறை சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி முன்னேறி இருந்தது. இந்த 13 வாய்ப்புகளில் இந்திய அணி இரண்டு டி20 உலக கோப்பைகளையும், இரண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பைகளையும், ஒரு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் மட்டுமே வென்று உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளை தவிர்த்து பார்த்தால் எந்த அணியும் 10 முறை ஐசிசி இறுதி போட்டிகளுக்கு முன்னேறவில்லை. அதிகபட்சமாக மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து 9 முறை ஐசிசி இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 8 முறையும், இலங்கை ஏழு முறையும் முன்னேறி உள்ளன.

Story first published: Monday, January 6, 2025, 8:11 [IST]
Other articles published on Jan 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+