Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC 2025 அதிக ரன் பட்டியல் - டாப் 10இல் ஜெய்ஸ்வால் மட்டுமே இருக்கிறார்.. ரோஹித், கோலி நிலை என்ன?

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 56 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களும் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1094 ரன்கள் உடன் 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 18 இன்னிங்ஸ்களில் மட்டுமே ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மூன்று சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடித்துள்ளார்.

ind vs ban india bangladesh

இதே பட்டியலில் 29 இன்னிங்ஸ்களில் 1398 ரன்கள் சேர்த்து இருக்கும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் ஜெய்ஸ்வாலுக்கு அடுத்ததாக இடம் பெற்றுள்ள இந்திய வீரர் ரோஹித் சர்மா ஆவார். அவர் 13 வது இடத்தில் தான் இடம் பெற்று இருக்கிறார். ரோஹித் சர்மா 18 இன்னிங்ஸ்களில் 711 ரன்கள் எடுத்துள்ளார். அவர் மூன்று சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் அடித்து இருக்கிறார்.

சுப்மன் கில் 15வது இடத்தில் இடம் பிடித்து இருக்கிறார். அவர் 18 இன்னிங்ஸ்களில் 690 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவர் மூன்று சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலியை விட ரவீந்திர ஜடேஜா அதிக ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா 10 இன்னிங்ஸ்களில் மட்டும் பேட்டிங் செய்து 416 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.

விராட் கோலி 202௩இல் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்காததால் வெறும் 8 இன்னிங்ஸ்களில் மட்டுமே பேட்டிங் செய்துள்ளார். அதில் 392 ரன்கள் சேர்த்து இருக்கிறார். ஜடேஜா 30-வது இடத்திலும், விராட் கோலி 36 ஆவது இடத்திலும் உள்ளனர். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் 11 இன்னிங்ஸ்களில் 293 ரன்கள் சேர்த்து 50வது இடத்தில் இடம் பெற்று இருக்கிறார். அவர் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாமை முந்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. பாபர் அசாம் 52 வது இடத்தில் இருக்கிறார். அவர் 13 இன்னிங்ஸ்களில் 266 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Story first published: Monday, September 23, 2024, 6:40 [IST]
Other articles published on Sep 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+