Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC- டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இந்திய அணி உட்பட ஒரே வாரத்தில் ஐந்து அணிகள் மோதல்.. முக்கியமான கட்டம்

அடிலெய்டு: 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தனது கடைசி தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ளன. இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் வரும் டிசம்பர் 6 முதல் துவங்க உள்ளது.

இந்த போட்டி நடைபெற உள்ள அதே நேரத்தில் மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளன. தென்னாப்பிரிக்கா -இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் இதே நாட்களில் நடைபெற உள்ளன.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான பந்தயத்தில் உள்ளன. இதில் நியூசிலாந்து அணிக்கான வாய்ப்பு மிகவும் குறுகியதாக உள்ளது. எனினும், அந்த அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றால், பிற அணிகளின் வெற்றி தோல்விகளை வைத்து இறுதிப் போட்டிக்கு முன்னேற சிறிய வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

அதே போல, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கைக்கு வெற்றி அவசியமாகிறது. ஒருவேளை இலங்கை அணி இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இருந்து விலக நேரிடும். மறுபுறம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன போட்டியில் ஆஸ்திரேலியாவும் அதே நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா இந்த தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் 90 சதவீதம் இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்யலாம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றால் 100 சதவீதம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.

எனவே, இந்த வாரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான வாரமாக மாறி உள்ளது. மேலும், இந்த மூன்று போட்டிகளில் தற்போதைய உலகின் நான்கு முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் என அறியப்படும் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் விளையாட உள்ளனர்.

மேலும், எதிர்கால டெஸ்ட் நட்சத்திரங்களாக சுட்டிக் காட்டப்படும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து), கமிந்து மென்டிஸ் (இலங்கை), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (தென்னாப்பிரிக்கா) ஆகிய இளம் வீரர்களும் விளையாட உள்ளனர். எனவே, இந்த வாரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைய உள்ளது.

Story first published: Tuesday, December 3, 2024, 14:45 [IST]
Other articles published on Dec 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+