Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC- இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்னவாகும்?

பிரிஸ்பேன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையால் டிராவில் முடிந்தால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி பார்க்கலாம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன. இந்த நிலையில், இந்த தொடரின் மூன்றாவது போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற உள்ளது.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

இந்த போட்டி டிசம்பர் 14 முதல் டிசம்பர் 18 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் முதல் நான்கு நாட்கள் அன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அதனால் இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடையவும் வாய்ப்பு உள்ளது.

மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைந்தால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியின் வாய்ப்பு பாதிக்கப்படக்கூடும். தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் 1 - 1 என சமநிலையில் உள்ளது.

அடுத்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி. இதற்கு முன்பு பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருப்பதால் இந்த முறையும் ஆஸ்திரேலியாவை காபா மைதானத்தில் வீழ்த்தும் வாய்ப்பு உள்ளது. ஆனால், மழை குறுக்கிட்டால் அதனால் போட்டி டிராவில் முடிவடைய வாய்ப்புள்ளது.

அப்படி நடந்தால் இந்திய அணி நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது இந்திய அணி வீரர்களுக்கு மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும். ஒருவேளை இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால் அது இன்னும் மோசமாக இருக்கும்.

Story first published: Friday, December 13, 2024, 18:29 [IST]
Other articles published on Dec 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+