Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final: தென்னாப்பிரிக்காவுக்கு மரண அடி.. மிரள வைத்த பேட் கம்மின்ஸ்.. 6 விக்கெட், 74 ரன் முன்னிலை

லண்டன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 138 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்துவீசி ஆறு விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த இறுதிப் போட்டியின் முதல் நாள் அன்று ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

World Test Championship AUS vs SA Final Day 2 South Africa Fights Back

இந்த நிலையில், இரண்டாவது நாள் அன்று தென்னாப்பிரிக்க அணி முதல் நாளை விட சற்று விரைவாக ரன் சேர்க்க முயன்றது. அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா, முதல் நாளை விட இரண்டாவது நாள் அன்று வேகமாக ரன் சேர்த்தார். அவர் 36 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் டேவிட் பெடிங்ஹாம் சிறப்பாக விளையாடி ரன் குவித்திருந்தார். உணவு இடைவேளையின்போது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது. பவுமா ஆட்டமிழந்த பிறகு, கைல் வெரெய்ன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மார்க்கோ ஜான்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இவர்கள் இருவரும் கம்மின்ஸ் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டேவிட் பெடிங்ஹாம் அபாரமாக விளையாடி 111 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேசவ் மகராஜ் ஏழு ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். காகிசோ ரபாடா கடைசி விக்கெட்டாக பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அபாரமாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் 18.1 ஓவரில் ஆறு மெய்டன் ஓவர்கள் உட்பட 28 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஷ் ஹேசில்வுட் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். நாதன் லியோன் மற்றும் பியூ வெப்ஸ்டர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

Story first published: Thursday, June 12, 2025, 18:01 [IST]
Other articles published on Jun 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+