Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final: தென் ஆப்பிரிக்கா சோலி முடிந்தது.. கொஞ்ச வெளிச்சத்தையும் ஊதி அணைத்த அலெக்ஸ் கேரி

லண்டன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸின் முடிவில் 74 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றது.

அப்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி பெறுவதற்கான வெளிச்சம் கிடைத்தது. ஆனால், ஏழாம் வரிசையில் இறங்கிய அலெக்ஸ் கேரி 43 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் நம்பிக்கையை உடைத்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கும் அதிகமான முன்னிலையை பெற்று இருந்தது. இந்தப் போட்டி நடைபெற்று வரும் லார்ட்ஸ் ஆடுகளத்தில் இரண்டு நாட்கள் முடிவதற்குள் 28 விக்கெட்கள் சரிந்துள்ளன. இந்த நிலையில் நான்காவது இன்னிங்ஸில் 200 ரன்களை எடுப்பது சவால்தான்.

WTC Final 2025 Australia Crumbles in Second Innings Against South Africa

முன்னதாக ஆஸ்திரேலிய அணி வெறும் 73 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணியின் கூடாரம் இருண்டு போனது. மறுபுறம், இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என சோகத்தில் ஆழ்ந்திருந்த தென் ஆப்பிரிக்க அணியின் கூடாரம் சுறுசுறுப்பானது. அந்த அணியின் பயிற்சியாளர்கள் மெக்டொனால்ட் மற்றும் டேனியல் வெட்டோரி, ஆஸ்திரேலிய அணியின் சரிவை அடுத்து இந்த போட்டியில் வெல்வது குறித்து தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தனர்.

ஆனால், அலெக்ஸ் கேரி ஆட்டம் போட்டியின் போக்கை மாற்றியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும், பியூ வெப்ஸ்டர் 72 ரன்களும் எடுத்து அரைசதம் அடித்திருந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 138 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த நிலையில், இரண்டாவது நாளின் இரண்டாவது பகுதியில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது.

அந்த அணியின் துவக்க வீரர் மார்னஸ் லாபுஷேன் மட்டுமே ஓரளவு தாக்குப் பிடித்து 22 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் 13 ரன்களை எடுத்திருந்தார். இவர்கள் இருவரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

உஸ்மான் கவாஜா 6 ரன்கள், கேமரூன் கிரீன் ரன் எதுவும் எடுக்கவில்லை, டிராவிஸ் ஹெட் 9 ரன்கள், பியூ வெப்ஸ்டர் 9 ரன்கள், பேட் கம்மின்ஸ் 6 ரன்கள் எடுத்து வரிசையாக ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி தற்போது 73 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அலெக்ஸ் கேரி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஸ்டார்க் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். மறுபுறம் நாதன் லியோன் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 144 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து இருந்தது. ஆஸ்திரேலிய அணி 218 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்த போட்டி நடந்து வரும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், 200 ரன்களை தாண்டிய இலக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு கடினமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அலெக்ஸ் கேரி ஆடிய ஆட்டமே காரணம்.

Story first published: Thursday, June 12, 2025, 21:45 [IST]
Other articles published on Jun 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+