Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

50 ஆண்டு சாதனை.. வரலாறு படைத்த கம்மின்ஸ்.. தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவை வெளியே அனுப்பினார்

லண்டன்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 50 ஆண்டு கால லார்ட்ஸ் மைதான சாதனை ஒன்றை மீண்டும் செய்து வரலாறு படைத்து இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆவர் இந்த சாதனையை செய்து இருக்கிறார்.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை ஆஸ்திரேலியா தனது பந்துவீச்சின் மூலம் அச்சுறுத்தி வருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் நம்பிக்கையாக இருந்தவர் டெம்பா பவுமா. முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 43 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த நிலையில், நான்காம் வரிசையில் களமிறங்கிய அணி கேப்டன் டெம்பா மீது அதிக அழுத்தம் இருந்தது. முதல் நாள் அன்று அவர் மிகவும் ஆமை வேகத்தில் ஆடியிருந்தார். அவர் 37 பந்துகளை சந்தித்து மூன்று ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

World Test Championship Final Pat Cummins records 50 year old record by beating Temba Bavuma

இந்த நிலையில், இரண்டாவது நாள் அன்று அவர் சற்று வேகமாக ரன் குவிக்கத் தொடங்கினார். பவுமா 36 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா கேப்டனை ஆஸ்திரேலியா கேப்டன் வெளியே அனுப்பினார்.

1975 ஆம் ஆண்டுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் எதிரணி கேப்டனை அவுட் ஆக்கும் நிகழ்வு அரங்கேறி உள்ளது. 1975இல் ஆஸ்திரேலியா கேப்டன் இயான் சேப்பல், இங்கிலாந்து அணி கேப்டன் டோனி கிரெய்க் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அதற்கு முன் 1909ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா கேப்டன் மான்டி நோபிள் இங்கிலாந்து கேப்டன் ஆர்ச்சி மெக்லாரன் விக்கெட்டை இரண்டு இன்னிங்கஸ்களிலும் வீழ்த்தி இருந்தார்.

1975க்கு பிறகு இப்போது பேட் கம்மின்ஸ், தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். மேலும், இந்த விக்கெட்டின் மூலம் மீண்டும் ஆஸ்திரேலியா அணியின் கைகளுக்கு இந்த போட்டி வந்தது. அப்போது தென்னாப்பிரிக்கா 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அடுத்து வந்த கைல் வெரெய்ன் 13 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து வந்த மார்க்கோ ஜான்சன் ரன் ஏதும் எடுக்காமல் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் சிறப்பாக ஆடிய பெடிங்ஹாம் 45 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் வலையில் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் என்ற மோசமான நிலைக்குச் சென்றது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதல் நாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அப்போது அவர் வியான் முல்டர் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம், மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினார் கம்மின்ஸ்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை விட கூடுதலாக ரன் சேர்க்குமா? அல்லது 200 ரன்களுக்குள் சுருண்டு போகுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Thursday, June 12, 2025, 18:29 [IST]
Other articles published on Jun 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+