மும்பை : டெஸ்ட் போட்டிகளை பிரபலப்படுத்துவதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற புள்ளி பட்டியலை ஐசிசி அறிமுகப்படுத்தியது.அதாவது ஒவ்வொரு இரண்டு ஆண்டிலும் ஒரு சைக்கிள் ஆக பிரிக்கப்பட்டு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும்.
இதில் யார் முதல் இரண்டு இடங்களை புள்ளி பட்டியலில் பிடிக்கிறார்களோ அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.
அதன்படி இந்திய அணி 2019 ஆம் ஆண்டும் 2023 ஆம் ஆண்டும் என தொடர்ந்து இரண்டு முறை பைனல் வரை சென்று இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஃபைனலுக்கு இந்தியா செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் ஆரம்பமே இந்தியாவுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி அடைந்த நிலையில் ஆறாவது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது. இந்த நிலையில் மேலும் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக ஐசிசி 2 புள்ளிகளை இந்தியாவுக்கு குறைத்து இருக்கிறது.
இதற்கு காரணம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஓவர்கள் வீச இந்தியா அதிக நேரம் எடுத்துக் கொண்டது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவுக்கு இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. புள்ளிகள் பெறுவதை கடினமாக இருக்கும் நிலையில் இவ்வாறு வாங்கிய புள்ளிகளும் குறைக்கப்படுவதால் இந்திய அணி இம்முறை பைனலுக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த சைக்கிள் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இன்னும் இந்தியா நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும். இதனால் இந்த புள்ளி பட்டியல் பல மாற்றங்களை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது தென்னாபிரிக்க அணி முதல் இடத்திலும்,நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் வங்கதேச அணி 4வது இடத்திலும், பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திலும்,இந்திய அணி ஆறாவது இடத்திலும் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த புள்ளி பட்டியலில் மேலே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.