Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு செம லக்.. பாகிஸ்தான் சோலியை முடித்த ஆஸ்திரேலியா

பெர்த் : 2023 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டியில் ஆடாத நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது.

அதனால், பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் சரிவை சந்தித்து இரண்டாம் இடத்துக்கு சென்றது. இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

World Test Championship Points Table 2023 - 2025 : India overtakes Pakistan

முன்னதாக 2023 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டுமே பங்கேற்று இருந்தது. அதில் இரண்டு போட்டியில் ஒரு வெற்றி, ஒரு டிரா பெற்று 66.67 வெற்றி சதவீதம் வைத்து இருக்கிறது. அந்த ஒரு டிராவும் கூட மழையால் போட்டி தடைபட்டதால் ஏற்பட்டது.

மறுபுறம் பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி பெற்றது. அதனால், 100 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி அப்போது புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதை அடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றி சதவீதம் 66.67 ஆக குறைந்து உள்ளது.

பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் ஆடி 66.67 சதவீதம் பெற்றுள்ளதால், இரண்டாம் இடத்திலும், இந்திய அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடி 66.67 சதவீதம் பெற்றுள்ளதால் முதல் இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அந்தப் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் மாற்றம் ஏற்படலாம்.

ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற போதும் 41.67 என்ற வெற்றி சதவீதமே பெற்றுள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா ஆடி இருந்தது. அந்த தொடரில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டிரா செய்து இருந்ததால் அதிக வெற்றி சதவீதத்தை பெற முடியவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல் -

1. இந்தியா - 2 போட்டிகள் - 66.67 வெற்றி சதவீதம்
2. பாகிஸ்தான் - 3 போட்டிகள் - 66.67 வெற்றி சதவீதம்
3. நியூசிலாந்து - 2 போட்டிகள் - 50 வெற்றி சதவீதம்
4. வங்கதேசம் - 2 போட்டிகள் - 50 வெற்றி சதவீதம்
5. ஆஸ்திரேலியா - 6 போட்டிகள் - 41.67 வெற்றி சதவீதம்
6. வெஸ்ட் இண்டீஸ் - 2 போட்டிகள் - 16.67 வெற்றி சதவீதம்
7. இங்கிலாந்து - 5 போட்டிகள் - 15 வெற்றி சதவீதம்
8. இலங்கை - 2 போட்டிகள் - 0 வெற்றி சதவீதம்
9. தென்னாப்பிரிக்கா - இதுவரை போட்டிகளில் பங்கேற்கவில்லை.

Story first published: Sunday, December 17, 2023, 21:41 [IST]
Other articles published on Dec 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+