Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC புள்ளிப்பட்டியல் : ஆஸ்திரேலிய அணிக்கு ஆப்பு.. இந்திய அணிக்கும் சிக்கல்.. நம்பர் 1 யார்?

ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நடந்துள்ள மாற்றங்களை பார்க்கலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் இடம்பிடிக்கும் இரு அணிகள் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அனைத்து அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதன்படி ஒவ்வொரு அணிகளும் பெறும் வெற்றிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் நடந்து வருகின்றன.

World Test Championship Points Table 2023 - 2025 : Indian team raised to second spot in the WTC pointstable

இந்த புள்ளிப்பட்டியல் புள்ளிகள் அடிப்படையில் அல்லாமல் வெற்றி சதவிகிதம் அடிப்படையில் இடமளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்திய அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் 50 புள்ளிகள் பெற்று, 59.52 வெற்றி சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதன் காரணமாக 2வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்வி, ஒரு டிராவுடன் 55 சதவிகித வெற்றியுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்த புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-1 என்ற சமன் செய்தாலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது. இதனால் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 75 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றாலும் வாய்ப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற வேண்டுமென்றால் நியூசிலாந்து அணி தோல்வியடைய வேண்டும். நியூசிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, February 18, 2024, 20:56 [IST]
Other articles published on Feb 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+