Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் புள்ளிப்பட்டியல் - இந்திய அணிக்கு சம்மட்டி அடி.. பெரும் சரிவு.. இங்கிலாந்து எந்த இடம்?

ஹைதராபாத் : இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது.

தற்போது இந்தியா உள்ளிட்ட ஒன்பது அணிகள் ஆடி வரும் டெஸ்ட் தொடர்கள் அனைத்துமே 2023 - 2025 வரையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாகும். அதன்படி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இதன் ஒரு பகுதியாகும். இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருக்கிறது.

World Test Championship Points Table : India drops to fifth place after losing to England

அதன் மூலம் 2023இல் தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் ஆடி தன் இரண்டாவது தோல்வியை பதிவு செய்துள்ளது. மற்ற மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு டிரா செய்துள்ளது இந்திய அணி. அதன் மூலம் 43.33 வெற்றி சதவீதத்தை இந்திய அணி பெற்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் தான் அணிகள் வரிசைப்படுத்தப்படும்.

அந்த வகையில் இந்திய அணி 43.33 வெற்றி சதவீதம் பெற்று ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. முன்பு இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டி தோல்வியால் இந்த பெரிய சரிவை சந்தித்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்த போதும் 55 சதவீத வெற்றியுடன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் 50 சதவீத வெற்றியுடன் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி வங்கதேச அணிக்கும் கீழ் சரிந்து இருக்கிறது. அதே சமயம், வங்கதேசம் இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறது, இந்திய அணி ஐந்து போட்டிகளில் ஆடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி பரிதாபமாக எட்டாவது இடத்தில் உள்ளது. அதற்கு காரணம், அந்த அணி ஆஷஸ் தொடரில் இரண்டு தோல்விகளை பெற்றதே காரணம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் -

ஆஸ்திரேலியா - 55 வெற்றி சதவீதம்
தென்னாப்பிரிக்கா - 50 வெற்றி சதவீதம்
நியூசிலாந்து - 50 வெற்றி சதவீதம்
வங்கதேசம் - 50 வெற்றி சதவீதம்
இந்தியா - 43.33 வெற்றி சதவீதம்
பாகிஸ்தான் - 36.66 வெற்றி சதவீதம்
வெஸ்ட் இண்டீஸ் - 33.33 வெற்றி சதவீதம்
இங்கிலாந்து - 29.16 வெற்றி சதவீதம்
இலங்கை - 0 வெற்றி சதவீதம்

Story first published: Sunday, January 28, 2024, 22:03 [IST]
Other articles published on Jan 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+