Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்தில் இந்தியா -பாகிஸ்தான் டுவென்டி 20 'உலகப் போர்'.. ரசிகர்கள் குவிந்தனர்!

மிர்பூர்: இந்தியா பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டி மிர்பூரில் இன்று தொடங்குகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரு நாட்டு ரசிகர்களும் போட்டியை எதிர்நோக்கியுள்ளனர்.

2014ம் ஆண்டின் தொடக்கம் முதல் இது நாள் வரை தொடர்ந்து ஆங்காங்கே அடி வாங்கி உடம்பெல்லாம் வீங்கிக் கிடக்கும் இந்திய அணிக்கு இன்றும் அடுத்தடுத்து கிடைக்கப் போகும் வெற்றிகளு்ம், இறுதியாக கோப்பையும்தான் பெரும் ஆறுதலாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர்.

World Twenty20 Preview: India Vs Pakistan in Mirpur

இதே வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின்போதும் கூட இந்தியா கேவலமாக தோற்று வெ்ளியேறி வந்தது நினைவிருக்கலாம்.

இரு நாட்டு அணிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பார்ம் வகையில் பாகிஸ்தான்தான் வலுவாக உள்ளது. அதேசமயம், வரலாற்று ரீதியாக பார்த்தால் நமது கையே ஓங்கியுள்ளது. காரணம், இதற்கு முன்பு நடந்த உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டிகளில் இதுவரை இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை.

மொத்தம் 3 முறை மோதியுள்ளோம். மூன்றிலுமே பாகிஸ்தான் தோற்றுள்ளது.
ஆனால் இந்தியாவை விட பாகிஸ்தான் அணி சமீப காலத்தில் நிறை சர்வதேச டுவென்டி 20 போட்டிகளில் ஆடி நல்ல அனுபவத்துடன் உள்ளது. இந்தியாவோ, கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுடன் விளையாடியதோடு சரி.

ஷாஹித் அப்ரிதி, அஸ்வின், உமர் குல், விராத் கோஹ்லி, சயீத் அஜ்மல், டோணி என இரு நாட்டு அணியிலும் அதிரி புதிரி பண்ண வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.

எப்படியோ, இன்றைய போட்டி இரு நாட்டு ரசிகர்களைப் பொறுத்தவரை உலகப் போர் போலத்தான்- எப்போது எங்கு மோதினாலும். அந்த வகையில் இன்றைய போட்டியிலும் சரமாரியான சரவெடிகளைக் காணலாம் என்பதில் சந்தேகமில்லை.

அணிகள் விவரம்

இந்தியா - டோணி, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, விராத் கோஹ்லி, புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா, அஜிங்கியா ரஹானே, அஸ்வின், சுரேஷ் ரெய்னா, முகம்மது சமி, மோஹித் சர்மா,ரோஹித் சர்மா, யுவராஜ் சிங்.

பாகிஸ்தான் - கேப்டன் முகம்மது ஹபீஸ், அகமது சஷாத், பிலாவல் பட்டி, ஜுனைத் கான், கம்ரான் அக்மல், சயீத் அஜ்மல், ஷாஹித் அப்ரிதி, சர்ஜீல் கான், சோயப் மாலிக், சதோயப் மக்சூத், சோஹைல் தன்வீர், முகம்மது தல்ஹா, உமர் அக்மல், உமர் குல், சுல்பிகர் பாபர்.

Story first published: Friday, March 21, 2014, 18:54 [IST]
Other articles published on Mar 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+