Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: டிக்கெட் விற்பனை துவக்கம்

Chennai Chepauk Stadium
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன் பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2 ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் முதல் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று துவங்கியது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 19ம் தேதி துவங்குகின்றன. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மட்டும் 4 போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

உலகக் கோப்பைக்கு முன் பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் சேப்பாக்கம் மைதானத்தில் 2 ஆட்டங்கள் நடக்கின்றன.

வரும் 12ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. வரும் 16ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு ஆட்டங்களுமே பிற்பகல் 2. 30 மணிக்கு துவங்குகின்றன.

வரும் 12ம் தேதி தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று துவங்கியது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை வரும் 14ம் தேதி துவங்கும். டிக்கெட்கள் குறைந்தபட்சமாக ரூ. 50க்கும், அதிகபட்சமாக ரூ. 500க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+