ஆடுகளமா இல்லை புதைகுழியா? 3 நாள் கூட போட்டி தாண்டாது.. காரணம் என்ன?
பெங்களூரு: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் பகல் இரவு போட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளம் பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்பட்டது.
இதனால் இந்திய அணியின் முன்னணி வீரர்களான கோலி, ரோகித் சர்மா, விஹாரி ஆகியோர் ரன் சேர்க்க திணறினர்.

சுழற்பந்துவீச்சு
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே லக்மல் வீசிய பந்து, ஆடுகளத்தில் புதைகுழி போல் பாதிப்பை ஏற்படுத்தி மண் எல்லாம் பறந்தது. இது போன்று பந்து தொடர்ந்து ஆடுகளத்தில் படும் போது, அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் புற்கள் இன்றி காய்ந்த நிலையில், ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான செயல்பட தொடங்கியது.

பவுன்ஸ் இல்லை
பந்து ஆடுகளத்தில் பற்றி நன்றாக திரும்பியதால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதோடு சேர்ந்து பந்து பவுன்சும் ஆகவில்லை. இதனால் பந்தை பேட்டை வைத்து தடுப்பாட்டத்தில் ஈடுபடுவதும் மிகவும் சிரமமாக இருந்தது. குறிப்பாக விராட் கோலி ஆட்டமிழந்த விதம் எல்லாம் கொடுமையான விசயம். பந்து பவுன்ஸ் ஆகாமல் கோலி காலில் பட்டு எல்பிடபிள்பூ ஆனார்.

10 விக்கெட்
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி தரும் வகையில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். சுழற்பந்துவீச்சாளர்கள் வீசும் போது பந்து திரும்புவதற்குள், இறங்கி வந்தோ இல்லை பேட்டை வீசியோ சிக்ஸ் அடித்தனர். ஆட்டத்தின் முதல் பாதியில் 4 விக்கெட்டும், 2வது பாதியில் 6 விக்கெட்டும் வீழ்ந்தது.
Recommended Video

3 நாளில் முடிந்துவிடும்
பிங்க் நிற பந்து இரவு நேரத்தில் கொஞ்சம் ஸ்விங் ஆகும். இதனால் போட்டி 2 நாள் இல்லை அதிகபட்சம் 3 நாளில் முடிந்துவிடும். இதனால் பேட்ஸ்மேன்களுக்கு இந்தப் போட்டியில் போதாத காலமாக தான் இருக்கும். டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிவது நல்லதா இல்லை கெட்டதா என்ற பட்டிமன்றமும் சமூக வலைத்தளங்களில் தொடங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications