
டேவிட் வார்னரின் அசத்தல் வீடியோக்கள்
ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரரும் முன்னாள் கேப்டனுமான டேவிட் வார்னர், சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருபவர். அதிலும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவரின் அலப்பறைகளால் இன்ஸ்டாகிராம் பக்கமே அல்லோல கல்லோல படுகிறது.

ரசிகர்களின் லைக்குகள்
தொடர்ந்து தான் மட்டுமின்றி, தன்னுடைய குடும்பத்தினரையும் இணைத்துக் கொண்டு, டான்ஸ் ஆடுகிறேன் பேர்வழி என்று இவர் செய்யும் கூத்துக்களுக்கென்று தனி ரசிகர்கள் வட்டாரமே காணப்படுகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களும் இவருடைய வீடியோக்களில் அவ்வப்போது கமெண்ட் செய்து வருகின்றனர்.

டான்சர்ஸ் யார்?
இந்நிலையில், தற்போது டேவிட் வார்னர், பழைய வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஆடியுள்ள டான்சர்ஸ் யார் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகே நமக்கு தெரியவருகிறது அதில் ஆடியிருப்பவர்கள் இலங்கை ஸ்பின்னர் முத்தையா முரளிதரன் மற்றும் இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் என்பது.

விருப்பம் தெரிவித்த யுவராஜ் சிங்
இந்த வீடியோவில் தன்னுடைய கமெண்ட்டை பதிவு செய்துள்ள முன்னாள் வீரர் யுவராஜ் சிங், தனக்கு ஆஷூவின் நடனத்தை பார்க்க விருப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் நடத்தை காணவே அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கமே பரபரப்புக்கு உள்ளானது.


Click it and Unblock the Notifications