Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் பிரீமியர் லீக்.. 6 போட்டியில் 4 முறை 200 ரன்கள்.. பட்டையை கிளப்பிய குஜராத்

மும்பை : மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆண்களை விட பெண்களுக்கு தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

ஆனால் நாளடைவில் மகளிர் கிரிக்கெட் போட்டி தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்தது. இந்த நிலையில், டி20 கிரிக்கெட் தொடர் மூலம் மகளிர் கிரிக்கெட் தற்போது மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகளிர் பிக் பேஷ் போல் தற்போது மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கத்தில் மகளிர் அணி 120, 140 ரன்கள் தான் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

WPL 2023 - Gujarat Giants Women set 202 runs as target for RCB W

ஆனால், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ரன் வேட்டைகள் நடைபெறுவி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடைபெற்ற 6 லீக் ஆட்டத்தில் இதுவரை 4 முறை 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் அடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல் வெற்றிக்காக குஜராத் அணியும், ஆர்சிபி மகளிர் அணியும் மோதியது.

தொடக்க வீராங்கனை மேக்னா 8 ரன்களில் ஆட்டமிழக்க, சோபியா டங்கிலி மற்றும் ஹர்லின் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். குறிப்பாக சோபியா எதிரணி பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கத்தையும் சிதறடித்தார். சோபியா 18 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக்கில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை சோபியா பெற்றார்

28 பந்துகளை எதிர்கொண்ட சோபியா 11 பவுண்டரிகள், 3 சிக்சர்களை விளாசி 65 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் ஹர்லின் தியோல் 45 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் குஜராத் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

WPL 2023 - Gujarat Giants Women set 202 runs as target for RCB W

ஆஷ்லீக் கார்ட்னர் 19 ரன்களும், ஹேமலதா 16 ரன்களும் , சுதர்லேண்ட் 14 ரன்களும் எடுக்க, 20 ஓகூர் முடிவில் குஜராத் அணி 201 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஆர்சிபி மகளிர் அணி தொடக்க வீராங்கனை சோபி டிவைன் மற்றும் ஸ்மருதி மந்தானா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க 27 பந்துகளில் ஆர்சிபி மகளிர் அணி 50 ரன்களை கடந்தது.

Story first published: Wednesday, March 8, 2023, 22:02 [IST]
Other articles published on Mar 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+