Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL இல் வெற்றி பெற்றவர்களுக்கு எவ்வளவு பரிசு.. மகளிர் விளையாட்டிலேயே மிகவும் அதிகம்.. ஒரு பார்வை

மும்பை : மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகிறது.

மகளிர் கிரிக்கெட்டில் புதிய புரட்சியாக இந்த தொடர் நடைபெற்றது.. 150 ரன்கள் அடிப்பது சாதனை என கருதப்பட்ட நிலையில்,

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 200 ரன்களுக்கு மேல் எல்லாம் அடிக்கப்பட்டு வீராங்கனைகள் அசத்தினார்கள்.

மும்பை Vs டெல்லி

மும்பை Vs டெல்லி

பரபரப்பான இந்த தொடரில் மெக்லானிங் தலைமையிலான டெல்லி அணியும் ஹர்மன் பிரித் கவுர் தலைமையிலான மும்பை அணியும் மோதுகிறது. டெல்லி அணியை பொருத்தவரை நெட் ரன் ரேட் அதிகமாக இருந்ததால் அவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றார்கள். இரண்டு அணிகளுமே விளையாடிய எட்டு போட்டிகளில் தலா ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற்றது.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

அண்மையில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் உபி அணியை மும்பை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இது பைனலில் விளையாடும் இவ்விரு அணிக்கும் லீக் சுற்றில் இரண்டு முறை மோதி இருக்கிறது. இதில் ஒரு முறை மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், அடுத்த முறை டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது.

 பரிசுத் தொகை

பரிசுத் தொகை

மும்பை அணியில் நாட் சிவியர், ஹர்மன்பிரித் கவுர் போன்ற சிறந்த பேட்டிங் செய்யும் வீராங்கனைகள் இருக்கிறார்கள். டெல்லி அணியில் மெக் லாணிங், செபாலி வர்மா போன்ற திறமையான வீராங்கனைகள் உள்ளனர். இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ஆறு கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு மூன்று கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. மூன்றாவது இடம் பிடித்த உபி அணிக்கு ஒரு கோடி ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்எல் vs மகளிர் லீக்

பிஎஸ்எல் vs மகளிர் லீக்

இது மகளிர் குழு விளையாட்டில் வழங்கப்படும் அதிக பரிசு தொகை ஆகும். அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தான் லீக் தொடரில் வெற்றியாளர்களுக்கு வெறும் மூன்று புள்ளி ஏழு கோடி ரூபாயும் இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 1.49 கோடி ரூபாயாகவும் வழங்கப்பட்ட நிலையில் அதைவிட மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அதிக பரிசு தொகை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 26, 2023, 17:48 [IST]
Other articles published on Mar 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+