Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் பிரீமியர் லீக்.. இறுதிப் போட்டிக்கு மும்பை தகுதி.. ஹாட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தி அசத்தல்

மும்பை : மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் உபி அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

5 போட்டிகளில் வென்று, பிறகு 2 போட்டியில் தோல்வி அடைந்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்ட மும்பை அணி , எலிமினேட்டர் சுற்றில் களமிறங்கி உபி அணியுடன் வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் களமிறங்கியது.

இதில் டாஸ் வென்ற உபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை அணியில் தொடக்க வீராங்கனைகளாக யாஷ்திகா பாட்டியா, ஹார்லி மேத்தீவ்ஸ் களமிறங்கினர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்த நிலையில், யாஷ்திகா 21 ரன்களிலும், மேத்தீவ்ஸ் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நாட் சிவியர் அதிரடியாக விளையாடி உபி அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். 26 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் மும்பை அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.

182 ரன்கள்

182 ரன்கள்

மறுமுனையில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 14 ரன்களில் வெளியேற, நியூசிலாந்து வீராங்கனை அமீலா கெர் 19 ரன்களில் 29 ரன்கள் சேர்த்தார். கடைசி வரை அதிரடியாக விளையாடிய நாட் சிவியர் 38 பந்தில் 72 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் பூஜா 4 பந்தில் 11 ரன்கள் அடிக்க மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்துள்ளது.

தடுமாறிய உபி

தடுமாறிய உபி

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை எதிர்கொண்டு விளையாடிய உபி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. அலிசா ஹெலி 11 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்வேதா செரவாத் 1 ரன்னில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தஹிலா மெக்ராத் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் 21 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்து உபி அணி தடுமாறியது.

வாங் ஹாட்ரிக் சாதனை

வாங் ஹாட்ரிக் சாதனை

இதனையடுத்து சரிவிலிருந்த அணியை கிரண் பிரபு அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். அப்போது தான் ஆட்டத்தின் 13வது ஓவரை வீசிய மும்பை அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீராங்கனை வாங் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதனால் உபி அணி 110 ரன்களில் சுருண்டது. வாங் 15 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்த மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Story first published: Friday, March 24, 2023, 23:51 [IST]
Other articles published on Mar 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+