Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL- 36 பந்தில் 99 ரன்கள் விளாசிய சோபி டிவைன்..ஆர்சிபி தொடர்ந்து 2வது வெற்றி.. பிளே ஆப் செல்லுமா RCB

மும்பை : மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

வாழ்வா சாவா என்ற கட்டத்தில் ஆர்சிபி அணி விளையாடியது. இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீராங்கனை சோபியா டங்கிலி 10 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து மேக்னா மற்றும் லாரா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒரு முனையில் மேக்னா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

இதனால் ரன் அடிக்கும் வேகத்தை உயர்த்த வேண்டும் என்று லாரா அதிரடியை காட்டினார். 42 பந்துகளை எதிர்கொண்ட லாரா 68 ரன்களை விளாசினார். இதில் 9 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதனையடுத்து நடுவரிசையில் விளையாடிய ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஸ்லிக் கார்ட்னர் 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார்.

188 ரன்கள்

188 ரன்கள்

இறுதியில் ஹேமலதா 6 பந்தில் 16 ரன்களும், ஹர்லின் தியோல் 5 பந்தில் 12 ரன்களும் குவிக்க, குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் விளாசியது. ஆர்சிபி தரப்பில் சோபி டிவைன் 1 விக்கெட்டும், ஸ்ரேயங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 சோபி டிவைன் அதிரடி

சோபி டிவைன் அதிரடி

இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை ஆர்சிபி மகளிர் அணி எதிர்கொண்டது. முதல் விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தானாவும், சோபி டிவைனும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஸ்மிருமி மந்தானா ஒரு புறம் நிலைத்து நின்று ஆட, மறுபுறம் சோபி டிவைன் ருத்ரதாண்டவம் ஆடினார்.

99 ரன்கள்

99 ரன்கள்

4 சிக்சர், 6 பவுண்டரிகளை விரட்டிய டிவைன்20 பந்தில் அரைசதம் கடந்தார். அத்துடன் நிற்காமல் தொடர்ந்து அதிரடியை சோபி டிவைன்காட்டினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சோபி டிவைன் 36 பந்தில் 99 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். இதில் 8 சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோ 125 ரன்கள் சேர்த்தது. இறுதியில் எலிஸ் பெர்ரி ஹேத்தர் நைட் அதிரடியாக விளையாட ஆர்சிபி மகளிர் அணி 15.3வது ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

ஆர்சிபி தகுதி பெறுமா?

ஆர்சிபி தகுதி பெறுமா?

இதன் மூலம் ஆர்சிபி அணி தொமர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. தற்போது ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் உபியை வீழ்த்த வேண்டும். ஆர்சிபி மும்பையை வீழ்த்த வேண்டும். முதல் 4 போட்டிகளில் ஆர்சிபி தோற்ற நிலையில் விராட் கோலி சந்திப்புக்கு பிறகு தொடர்ந்து 2 போட்டியில் வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 18, 2023, 23:17 [IST]
Other articles published on Mar 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+