Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி மகளிர் அணியால் வந்த வினை.. விராட் கோலியை குத்திக் காட்டிய விஜய் மல்லையா

பெங்களூர் : 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மகளிர் ஐபிஎல் தொடரின் இரண்டாவது ஆண்டிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி வெற்றி பெற்றது

ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆண்கள் அணி 2008 முதல் 2023 வரை 16 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. இந்த 16 ஆண்டுகளிலும் மூன்று முறை மட்டுமே அந்த அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

WPL 2024 DC vs RCB Vijay Mallya wish RCB women s team and points out men s team overdue

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா மகளிர் அணியை பாராட்டி இருக்கிறார். அதில் மகளிர் அணியை மட்டும் பாராட்டியதோடு நிறுத்தாமல் ஆண்கள் அணியை குத்திக் காட்டி இருக்கிறார்.

அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆண்கள் அணி நீண்ட காலமாக கோப்பை வெல்லாமல் இருப்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார். விஜய் மல்லையா நீண்ட காலமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பற்றி எந்த கருத்தும் கூறாமல் இருந்த நிலையில் தற்போது மகளிர் அணி வெற்றியால் கருத்து கூறி இருக்கிறார். ஆனால், அதிலும் ஆண்கள் அணியை சுத்திக் காட்டி இருப்பதால் ரசிகர்கள் அந்த அணியை கிண்டல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நீண்ட நாள் கேப்டன் விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கோலி கேப்டனாக இருந்ததால் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை என பலரும் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

Story first published: Monday, March 18, 2024, 11:06 [IST]
Other articles published on Mar 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+