For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எகிறிய ஹார்ட் பீட்.. 11 பந்தில் 6 விக்கெட்.. 1 ரன்னில் வெற்றி.. டெல்லியை மிரள வைத்த உபி வாரியர்ஸ்

டெல்லி : 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் இதுவரை எந்த மகளிர் போட்டியிலும் நடக்காத சம்பவங்கள் நடந்தேறின. 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி, கையில் 6 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி ஆல் - அவுட் ஆகி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உபி வாரியர்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காததை செய்து மிரள வைத்தது.

டெல்லி கேபிடல்ஸ் - உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டியில் உபி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. தீப்தி சர்மா 59 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர காரணமாக இருந்தார்.

WPL 2024 DC Women vs UPW Women UP Warriorz beat DC by 1 run

அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு துவக்கம் அளித்து ஆடிய கேப்டன் மேக் லானிங் 46 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் ரன் குவிக்க திணறினர். ஆனாலும், 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் என்ற நிலையில் இருந்தது டெல்லி கேபிடல்ஸ்.

கடைசி 2 ஓவர்களில் 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது அந்த அணி. இந்த நிலையில் 19வது ஓவரை தீப்தி சர்மா வீசினார். அவர் முன்னதாக வீசிய ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி இருந்தார். அத்துடன் 19வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

அதே ஓவரின் நான்காவது பந்தில் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். 19வது ஓவரின் முடிவில் 129 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலைக்கு சென்றது டெல்லி. அடுத்து கிரேஸ் ஹாரிஸ் பந்து வீசிய கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார் ராதா யாதவ். இரண்டாவது பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. இன்னும் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது டெல்லி அணி.

கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஹாரிஸ் பந்தில் ராதா யாதவ் பவுல்டு அவுட் ஆனார். நான்காவது பந்தில் ஜெஸ் ரன் அவுட் ஆனார். ஐந்தாவது பந்தில் டிடாஸ் சாது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 137 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது டெல்லி கேபிடல்ஸ் அணி. இதை அடுத்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உபி வாரியர்ஸ். 11 பந்துகளில் 6 விக்கெட் வீழ்த்தி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உபி வாரியர்ஸ்.

Story first published: Saturday, March 9, 2024, 8:08 [IST]
Other articles published on Mar 9, 2024
English summary
WPL 2024 DC Women vs UPW Women : UP Warriorz beat DC by 1 run
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+