For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னா அடி.. டெல்லி கேபிடல்ஸ் ஆடிய ஆட்டம்.. அரண்டு போன ஆர்சிபி.. தெறிக்க விட்ட 2 வீராங்கனைகள்

பெங்களூர் : 2024 மகளிர் ஐபிஎல் லீக் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 194 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் ஷஃபாலி வர்மா 50 ரன்கள் குவித்து இருந்தார். ஆலிஸ் கேப்சி 46 ரன்கள் குவித்து இருந்தார். ஆனால், இவர்கள் இருவரைக் காட்டிலும் கடைசி 5 ஓவர்களில் ருத்ர தாண்டவம் ஆடிய மாரிசான் காப் மற்றும் ஜெஸ் ஜோனாசனால் தான் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.

WPL 2024 : Delhi Capitals vs Royal Challengers Bangalore match result

மாரிசான் 16 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். ஜெஸ் 16 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். கடைசி ஓவருக்கு முன்னதாக களமிறங்கிய அருந்ததி ரெட்டி 4 பந்துகளில் 10 ரன்கள் குவித்தார். இப்படி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 70 ரன்கள் குவித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.

அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா துவக்கத்தில் களமிறங்கி 43 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். மேக்னா நிதான ஆட்டம் ஆடி 31 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்று, 1.271 நெட் ரன் ரேட் உடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் 3 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்று 4 புள்ளிகள் பெற்ற போதும் நெட் ரன் ரேட் அடிப்படையில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

Story first published: Friday, March 1, 2024, 8:26 [IST]
Other articles published on Mar 1, 2024
English summary
WPL 2024 : Delhi Capitals vs Royal Challengers Bangalore match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+