Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL RCB vs MI : முக்கிய ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தானா ஏமாற்றம்.. தனி ஆளாக போராடிய ஆஸி. வீராங்கனை

டெல்லி : மகளிர் பிரிமியர் லீக் எலிமினேட்டர் தொடரில் ஆர்சிபி அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று டெல்லி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும், இந்த நிலையில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது,

இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தானா பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம்போல் முக்கிய ஆட்டத்தில் அவர் சொதப்பினார். மந்தானா இரண்டு பவுண்டரிகளை அடித்த நிலையில் அவர் பெரிய ஸ்கோரை எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்,

WPL 2024 Eliminator - RCB women set 136 runs as target for MI women

ஆனால் அவர் ஏழு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 10 ரன்களில் வெளியேறினார்.இதேபோன்று மற்றொரு தொடக்க வீராங்கனையான சோபியா 7 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். திஷா கசாத் டக்வுட்டாக, விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஸ் 14 ரன்கள் வெளியேறினார்,

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய வீராங்கனை எலீஸ் பெர்ரீ 50 பந்துகளை எதிர் கொண்டு 66 ரன்கள் சேர்த்தார், இதில் எட்டு பவுண்டர்களும் ஒரு சிக்சரும் அடங்கும், எனினும் அவருக்கு யாரும் துணை நிற்கவில்லை.இதனால் ஆர் சி பி அணி 20 ஓவர் முடிவில் வெறும் ஆறு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் தான் எடுத்தது.

மும்பை அணி தரப்பில் ஹேய்லி மேத்தீவ்ஸ், நாட் சிவியர் மற்றும் சாய்கா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர், இதனை அடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் மும்பை அணி விளையாடியது. கடைசி 3 ஓவர்களில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், மும்பை வீராங்கனைகள் சொதப்பினர். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் வரும் 17ஆம் தேதி ஆர்சிபி, டெல்லி அணி இறுதிப் போட்டியில் மோதுகிறது.

Story first published: Friday, March 15, 2024, 21:46 [IST]
Other articles published on Mar 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+