Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கு தான் 16 வருஷமா உருட்டிட்டு இருந்தீங்களா.. ஸ்மிருதியால் புது சோதனை.. கோலியை வெளுக்கும் மீம்ஸ்

டெல்லி : மகளிர் பிரிமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி அசத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் விராட் கோலியை கலாய்த்து உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் 16 சீசன்களாக விளையாடி வரும் ஆர்சிபி ஆடவர் அணி, இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஆனால் மகளிர் பிரிமியர் லீக்கின் 2வது சீசனிலேயே ஆர்சிபி மகளிர் அணி கோப்பையை வென்று சாதித்துள்ளது. இதனை கலாய்க்கும் வகையில், விரலுக்கேற்ற வீக்கம் படத்தில் கபாலி கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவை ஆர்சிபி மகளிர் அணியாக மாற்றி, "இப்ப என்ன பன்ற.. டீமை கலைச்சிட்டு.. எங்களுக்கு தண்ணீர் பாட்டில் தூக்கிட்டு வர" ஆடவர் அணியை பார்த்து கூறுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

WPL 2024 Fantastic Memes from Social Media after RCB women team becomes the Champion of the WPL for the First time

தூள் படத்தில் நாயகி ரீமா சென்-ஐ ஈர்ப்பதற்காக உடற்பயிற்சி செய்வது போல் விவேக் ஏமாற்றுவார். இதனை நம்பி ரீமா சென் பேசும் போது, திடீரென உள்ளே புகுந்து பறவை முனியம்மா, காகிதத்தாலான உடற்பயிற்சி பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்துவிடுவார். அதுமட்டுமல்லாமல், இந்த கருமத்தைதான் ராத்திரி முழுக்க ஒட்டிட்டு இருந்தியா என்று நக்கல் செய்வார். அதேபோல் பறவை முனியம்மாவாக ஆர்சிபி மகளிர் அணியையும், விவேக்காக ஆர்சிபி ஆடவர் அணியையும் மாற்றி, 16 சீசனா இந்த கோப்பையை ஜெய்க்க தான் உருட்டிட்டு இருந்தியா என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அமுக்கு டுமுக்கு அமால் டுமால் ரகம்.

WPL 2024 Fantastic Memes from Social Media after RCB women team becomes the Champion of the WPL for the First time

சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் வீட்டில் இருந்து புறப்படுவதை எண்ணி வடிவேலு மற்றும் நாசர் இருவரும் மகிழ்ச்சியடைவார்கள். அப்போது ரஜினிகாந்த், ஒரு மாதம் இருந்து செய்ய வேண்டிய வேலையை ஒரு வாரத்தில் முடித்துவிட்டேன் என்பார். அதனை ஆர்சிபி மகளிர் அணி பேசுவதாக மாற்றி, எங்களோட ஆடவர் அணி 16 வருஷமா பண்ணாததை.. நாங்கள் 2 சீசனிலேயே செய்து முடித்துவிட்டோம் என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

WPL 2024 Fantastic Memes from Social Media after RCB women team becomes the Champion of the WPL for the First time

சார்பட்டா பரம்பரை படத்தில் வாத்தியாராக வரும் பசுபதி, அடுத்த சண்டைக்கு யாரை தயார் செய்ய வேண்டும் என்று ஆலோசனை நடத்துவார். அப்போது ரங்கன் பசுபதிக்கு உதவியாக சாமியார் கெட்டப்பில் ஒருவர் இருப்பார். உடன் இன்னும் சிலர் இருப்பார்கள். அந்த புகைப்படத்தில் ரங்கன் கால் மீது மற்றொரு கால் போட்டு அமர்ந்திருப்பதை மாற்றி ஸ்மிருதி மந்தனாவையும், கீழ் அமர்ந்திருக்கும் சாமியாராக விராட் கோலியையும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் கொஞ்சம் அமைதியா இருங்கடா அப்ரசண்டிகளா ரகம்.

WPL 2024 Fantastic Memes from Social Media after RCB women team becomes the Champion of the WPL for the First time

"Pursuit of Happiness" படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்டாக் ப்ரோக்கராக பணி கிடைக்கும். அந்த மகிழ்ச்சியில் கண்ணீருடன் வெளி வரும் வில் ஸ்மித், "வாழ்க்கையின் இந்த ஒரு தருணம்.. இந்த சின்ன தருணத்திற்கு பெயர் தான் சந்தோகம்" என்று கூறுவார். அதனை மாற்றி 2008ஆம் ஆண்டில் இருந்து கோப்பையை வெல்ல முடியாமல் ஆர்சிபி அணி தவித்து வந்த நிலையில், முதல்முறையாக மகளிர் அணி கோப்பையை வென்று கொடுத்துள்ளது. இதனால் வில் ஸ்மித் பேசிய வசனத்தை ஆர்சிபி ரசிகர்கள் பேசுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எமோஷனல் டச்.

WPL 2024 Fantastic Memes from Social Media after RCB women team becomes the Champion of the WPL for the First time
Story first published: Monday, March 18, 2024, 10:03 [IST]
Other articles published on Mar 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+