Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL - கட்டி அணைக்க வந்த ரசிகர்.. தடுத்து நிறுத்திய ஆஸி. வீராங்கனை.. யாரு கிட்ட! பெங்களூரில் பரபர

WPL 2024 : மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது சீசன் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு நிகராக மகளிர் கிரிக்கெட் போட்டிக்கும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உங்களால் மட்டும் தான் சிக்ஸர் அடிக்க முடியுமா? எங்களாலும் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு தர முடியும் என வீராங்கனைகள் களத்தில் பட்டாசு போல் வெடிக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. ஆர்சிபி அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆன்லைனில் அவ்வளவு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன.

WPL 2024 Pitch invader issue - Australian cricketer Alyssa Healy heroic act gets appreciation

இந்த நிலையில் உத்திரபிரதேச அணியும் மும்பை அணியும் நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் விளையாடி வந்தனர். இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து உள்ள நிலையில், உத்தரப்பிரதேச அணி 16.3 ஓவர்கள் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்த நிலையில் மும்பை அணி பேட்டிங் செய்யும்போது ஒரு சம்பவம் நடந்தது. மும்பை அணியின் சஞ்சனா ஆட்டமிழந்தபோது திடீரென்று ரசிகர் ஒருவர் களத்திற்குள் வந்து வீராங்கனைகளை கட்டி அணைக்க முயன்றார். விராட் கோலி,ரோகித் சர்மா, தோனி போன்ற வீரர்களை இது போல் ரசிகர்கள் வந்து ஆசீர்வாதம் அல்லது கட்டி அணைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இதேபோன்று மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்த சம்பவம் நடந்தது. ஆனால் அந்த ரசிகர்கள் வருவதற்குள் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹெலி திடீரென்று அந்த ரசிகரை தடுத்து நிறுத்தினார்.பெண் தானே நாம் அவரை மீறி சென்றுவிடலாம் என அந்த ரசிகர் முயற்சித்தார். ஆனால் அலிசா ஹெலி கிடுக்கு பிடி போட்டு அந்த ரசிகரை நகரவிடாமல் செய்தார்.

இதனை அடுத்து பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை அழைத்துச் சென்றனர். இந்த காட்சி நேரலை செய்யப்படவில்லை அத்துமீறிய ரசிகரை ஆஸ்திரேலிய வீராங்கனை அபாரமாக தனி ஆளாக தடுத்து நிறுத்திய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மகளிர் பிரீமியர் லீக் புள்ளி பட்டியலில் டெல்லி அணி முதலிடத்திலும் ஆர் சி பி இரண்டாவது இடத்திலும் மும்பை மூன்றாவது இடத்திலும் உத்தர பிரதேஷ் நான்காவது இடத்திலும் குஜராத் அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

Story first published: Friday, March 1, 2024, 12:34 [IST]
Other articles published on Mar 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+