Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் ஐபிஎல் வரலாற்றிலேயே பிரம்மாண்ட சாதனை படைத்த கிரிக்கெட் குயின்.. கலங்கிய மும்பை இந்தியன்ஸ்

டெல்லி : 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் இடையே நடந்த லீக் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி ஆல் - ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்தார்.

மகளிர் ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து சாதித்த அவர் பேட்டிங்கிலும் தனி ஆளாக நின்று மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் வென்றால் தான் பிளே- ஆஃப் செல்ல முடியும் என்ற நிலையில் இருந்தது பெங்களூர் அணி. எல்லிஸ் பெர்ரியின் அபாரமான ஆட்டத்தால் பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

WPL 2024 RCB vs MI Ellys Perry took 6 wickets and create new record in WPL

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஹேலி மேத்யூஸ் 26, சஞ்சீவ் சாஜனா 30 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எல்லிஸ் பெர்ரி 4 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். கடந்த லீக் போட்டிகளில் எல்லிஸ் பெர்ரி ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத நிலையில் இந்த போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். மகளிர் ஐபிஎல் தொடரில் இதுவே சிறந்த பந்துவீச்சாகும்.

அவரது விக்கெட் வேட்டையால் மும்பை அணி 113 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து பெங்களூர் அணியின் சேஸிங்கில் எல்லிஸ் பெர்ரி 40 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். 6 விக்கெட் மற்றும் 40 ரன்கள் குவித்து ஆல் - ரவுண்டராக கலக்கினார் எல்லிஸ் பெர்ரி. தற்போது பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

Story first published: Wednesday, March 13, 2024, 7:56 [IST]
Other articles published on Mar 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+