WPL auction 2026: வெளிநாட்டு வீராங்கனைகள் காட்டில் மழை..1 வருட ஊதியத்தை ஒரே நொடியில் பெற்ற வீராங்கனை
டெல்லி: WPL எனப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான ஏலம் தற்போது டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 73 வீராங்கனைகளுக்கான இடம் நிரப்பப்பட உள்ளது. இதில் 23 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடங்குவார்கள்.
இந்த நிலையில் 50 லட்சம் ரூபாய் அடிப்படையாக விலையாக நிர்ணயிக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியல் முதலில் ஏல மேடைக்கு வந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ரேணுகா சிங் ஏல மேடைக்கு வந்தார். இந்திய வேகப்பந்துவீச்சாளரான இவர் 23 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

அண்மையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் ரேணுகா மொத்தமாகவே மூன்று விக்கெட்டுகளை தான் வீழ்த்தி இருந்தார். ஆனால் ரன்களை ஓரளவுக்கு தனது பந்து வீச்சு மூலம் கட்டுப்படுத்தினார். இந்த நிலையில் ரேணுகாவை ஆர் சி பி அணி மீண்டும் ஏலம் மூலம் தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இவருடைய அடிப்படை விலை 40 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. குஜராத் அணி அடிப்படை விலைக்கு ரேணுகாவை ஏலத்தில் கேட்டனர். ஆனால் உபி அணி போட்டியில் குதித்தது. இதன் அடுத்து இவருடைய விலை 60 லட்சம் ரூபாய் வரை உயர்ந்ததை அடுத்து உபி அணி போட்டியிலிருந்து விலகியது. இதன் பிறகு 60 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி ஏலத்தில் இவரை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து வீராங்கனை ஆன சோபி எக்லெஸ்டோன் ஏல மேடைக்கு வந்தார். சுழற் பந்துவீச்சாளரான இவர் கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதைப் போன்று மகளிர் பிரீமியர் லீக் தொடரிலும் 25 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இதனால் இவர் பெயர் வந்தவுடன் பல அணிகளும் போட்டி போட்டது. இவருக்கு டெல்லி அணி 85 லட்சம் ரூபாய் வரை கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அப்போது உபி அணி தங்களுடைய ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தப் போவதாகவும் இதே விலையை தாங்கள் வழங்குகிறோம் என்றும் கூறியிருந்தது. இதற்கு டெல்லி அணி ஒப்புக்கொண்டதை அடுத்து உபி அணி மீண்டும் அவரை அதே விலைக்கு வாங்கியது.
இதேபோன்று ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த மேக் லெனின் அடிப்படை விலையாக 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு வந்தார். அப்போது இவரை வாங்க டெல்லியும், உபி வாரியர்ஸ் அணியும் போட்டி போட்டனர். இதனால் அவருடைய விலை ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இதனை அடுத்து ஒரு கோடியே 90 லட்சம் கொடுத்து உபி வாரியர்ஸ் அணி வாங்கியது இதன் மூலம் அந்த அணியின் கேப்டனாக மேக் லெனிங் விளங்குவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications