Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL 2026 தேதிகள் அறிவிப்பு.. ஏலத்துக்கு நடுவே பிசிசிஐ அதிரடி.. ஒரு மாதம் முன்பே தொடங்கும் தொடர்

டெல்லி: 2026 மகளிர் ஐபிஎல் (WPL) தொடருக்கான மெகா ஏலம் புதுடெல்லியில் நடைபெற்று வந்த போதே, பிசிசிஐ 4-வது சீசனுக்கான தேதிகள் மற்றும் மைதானங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வழக்கமான கால அட்டவணை மாற்றப்பட்டு, இம்முறை முன்கூட்டியே தொடர் நடத்தப்படவுள்ளது. இன்று (நவம்பர் 27) ஏலம் தொடங்குவதற்கு முன்பாக இந்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது.

தேதிகள் மற்றும் மைதானங்கள் விவரம்:

2026 மகளிர் ஐபிஎல் தொடங்கும் தேதி: ஜனவரி 9, 2026
2026 மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டி: பிப்ரவரி 5, 2026
மைதானங்கள்: இம்முறை நவி மும்பை மற்றும் வதோதரா ஆகிய இரண்டு நகரங்களில் மட்டுமே அனைத்துப் போட்டிகளும் நடைபெறும்.

WPL 2026 Dates and Venues announced by BCCI Amidst mega Auction Why the Sudden Preponement to January

முதல் போட்டி எங்கே? பைனல் எங்கே?

பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 2026 மகளிர் ஐபிஎல் தொடக்க ஆட்டம் ஜனவரி 9-ம் தேதி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும். 2026 மகளிர் ஐபிஎல் இறுதிப்போட்டி பிப்ரவரி 5-ம் தேதி வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெறும்.

வழக்கமாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறும். ஆனால் இம்முறை ஜனவரி மாதமே நடத்தப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. 2026-ம் ஆண்டு ஆடவர் டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இந்த உலகக்கோப்பைத் தொடர் பிப்ரவரி மாதமே தொடங்கவுள்ளதால், நாட்டின் முக்கிய மைதானங்கள் அனைத்தும் உலகக்கோப்பைக்காகத் தயார் செய்யப்பட வேண்டும். இதன் காரணமாகவே மகளிர் ஐபிஎல் தொடர் ஒரு மாதம் முன்னதாகவே மாற்றப்பட்டுள்ளது.

மேலும், உலகக்கோப்பை காரணமாகப் பிற மைதானங்கள் தயாரிப்பு பணிகளில் இருக்கும் என்பதால் தான், நவி மும்பை மற்றும் வதோதரா என இரண்டே மைதானங்களில் இத்தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் இரண்டு முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 27, 2025, 16:42 [IST]
Other articles published on Nov 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+