Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL 2026: மரண அடி வாங்கிய ஆர்சிபி மகளிர் அணி.. வெறும் 109 ரன்கள் எடுத்து படுதோல்வி

மும்பை: 2026 மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. வதோதராவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, அந்த அணியின் தொடர் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

110 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4.2 ஓவர்கள் மீதம் இருக்கையிலேயே வெற்றியை ருசித்தது. துவக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா மற்றும் லிசெல்லி லீ ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தாலும், லாரா வோல்வார்ட் அணியை சரிலிருந்து மீட்டார். நிதானமாக விளையாடிய அவர் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் குவித்தார்.

WPL 2026 Delhi Capitals End RCB s Unbeaten Streak with Dominant Win

கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்கள் சேர்த்து அவருக்கு உறுதுணையாக இருந்தார். இறுதியில் மரிசானே காப் ஆட்டமிழக்காமல் 19 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. நெட் ரன் ரேட்டை உயர்த்தியதுடன், 6 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. குஜராத் ஜெயண்ட்ஸ் மூன்றாவது இடத்திற்கும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டன. பெங்களூரு அணி முதல் தோல்வியைச் சந்தித்தாலும், 10 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இப்போட்டியின் முக்கிய அம்சமாக டெல்லி வீராங்கனை நந்தினி சர்மாவின் பந்துவீச்சு அமைந்தது. பெங்களூரு பேட்ஸ்மேன்களைத் திணறடித்த அவர், 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை (13 விக்கெட்டுகள்) வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையுடன் ஊதா நிற தொப்பியைத் தன்வசப்படுத்தினார். குஜராத் அணியின் சோபி டிவைன் 11 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஆரஞ்சு தொப்பி நிலவரம்

அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பி பட்டியலில் உ.பி வாரியர்ஸ் அணியின் ஃபோபி லிட்ச்ஃபீல்ட் 243 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 240 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா நேற்றைய போட்டியில் 38 ரன்கள் எடுத்ததன் மூலம், மொத்தம் 230 ரன்களுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டெல்லி அணியின் லிசெல்லி லீ 219 ரன்களுடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.

Story first published: Sunday, January 25, 2026, 8:50 [IST]
Other articles published on Jan 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+