Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2026 மகளிர் ஐபிஎல் மெகா ஏலம்.. 277 வீராங்கனைகள் களத்தில், 73 இடங்களுக்கு கடும் போட்டி

டெல்லி: 2026 மகளிர் ஐபிஎல் (WPL) கிரிக்கெட் தொடரின் மெகா ஏலப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஏலம் வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி புது டெல்லியில் நடைபெற உள்ளது. மொத்தம் 277 வீராங்கனைகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், 5 அணிகளிலும் சேர்த்து 73 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. இதனால், வீராங்கனைகளைத் தேர்வு செய்வதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலப் பட்டியலின் முழு விவரம்:

மொத்த வீராங்கனைகள்: 277

இந்திய வீராங்கனைகள்:

  • 194 (52 சர்வதேச வீராங்கனைகள், 142 உள்ளூர் வீராங்கனைகள்)
  • வெளிநாட்டு வீராங்கனைகள்: 83 (66 சர்வதேச வீராங்கனைகள், 17 உள்ளூர் வீராங்கனைகள்)
  • நிரப்பப்பட வேண்டிய இடங்கள்: 73 (50 இந்திய வீராங்கனைகள், 23 வெளிநாட்டு வீராங்கனைகள்)
WPL 2026 Mega Auction 277 Players Listed only 73 Spots left to be filled Deepti Sharma Meg Lanning in Marquee List

நட்சத்திர வீராங்கனைகள் மற்றும் அடிப்படை விலை:

இந்த ஏலம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்குத் தொடங்கும். முதல் சுற்றில் 8 நட்சத்திர வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

ரூ.50 லட்சம் அடிப்படை விலை:

  • தீப்தி சர்மா (இந்தியா)
  • சோஃபி டிவைன் (நியூசிலாந்து)
  • சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து)
  • அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா)
  • அமெலியா கெர் (நியூசிலாந்து)
  • மெக் லானிங் (ஆஸ்திரேலியா).

ரூ.40 லட்சம் அடிப்படை விலை:

  • ரேணுகா சிங் (இந்தியா)

ரூ.30 லட்சம் அடிப்படை விலை:

  • லாரா வோல்வார்ட் (தென்னாப்பிரிக்கா).

ஒட்டுமொத்தமாக, 19 வீராங்கனைகள் தங்களை அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.50 லட்சத்தில் பதிவு செய்துள்ளனர். 11 வீராங்கனைகள் ரூ.40 லட்சத்திலும், 88 வீராங்கனைகள் ரூ.30 லட்சத்திலும் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய வீராங்கனைகளுக்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியாவில் இருந்து அதிகபட்சமாக 23 வீராங்கனைகளும், இங்கிலாந்தில் இருந்து 22 வீராங்கனைகளும் ஏலப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நியூசிலாந்து (13), தென்னாப்பிரிக்கா (11), வங்கதேசம் (3), இலங்கை (3), ஐக்கிய அரபு அமீரகம் (2) ஆகிய நாடுகளின் வீராங்கனைகளும் களத்தில் உள்ளனர். தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து தலா ஒரு வீராங்கனை இந்தப் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அணிகளின் கையிருப்புத் தொகை மற்றும் RTM கார்டுகள்:

  • யுபி வாரியர்ஸ் (UPW): கையிருப்புத் தொகை ரூ. 14.50 கோடி, RTM கார்டுகள் 4

  • குஜராத் ஜெயண்ட்ஸ் (GG): கையிருப்புத் தொகை ரூ. 9 கோடி, RTM கார்டுகள் 3

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): கையிருப்புத் தொகை ரூ. 6.15 கோடி, RTM கார்டுகள் 1

  • மும்பை இந்தியன்ஸ் (MI): கையிருப்புத் தொகை ரூ. 5.75 கோடி, RTM கார்டுகள் 0

  • டெல்லி கேப்பிடல்ஸ் (DC): கையிருப்புத் தொகை ரூ. 5.70 கோடி, RTM கார்டுகள் 0

அதிகபட்ச கையிருப்புத் தொகையுடன் யுபி வாரியர்ஸ் அணி களமிறங்குவதால், அவர்கள் சிறந்த வீராங்கனைகளை வாங்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், அவர்களிடம் 4 'ரைட் டு மேட்ச்' (RTM) கார்டுகள் இருப்பதால், அவர்கள் தங்கள் பழைய வீராங்கனைகளை மீண்டும் அணியில் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளிடம் RTM கார்டுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் டாலியா மெக்ராத் மற்றும் சோஃபி மோலினக்ஸ் போன்ற முக்கிய வீராங்கனைகள் இந்தப் பட்டியலில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Story first published: Friday, November 21, 2025, 15:29 [IST]
Other articles published on Nov 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+