Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL 2026: முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி மோதல்.. டாசில் ஸ்மிருதி மந்தனாவுக்கு லக்

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் 2026 ஆம் ஆண்டு சீசன் இன்று முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று இருக்கின்றது. 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்று சாதனை படைத்த பிறகு மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடைபெறுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி, ஆர் சி பி மகளிர் அணியை இன்று மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற rcb அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தானா, முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார்.

MI W vs RCB W

இது குறித்து பேசிய அவர், பனிப்பொழிவு இங்கு அதிகம் இருக்கும் என்பதால் தாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருப்பதாக கூறியுள்ளார். அணியில் இருக்கும் வீராங்கனைகள் அனைவரும் நன்றாக பழகி உறுதுணையாக இருப்பார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்.

இந்த தொடரில் விளையாட மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணியில் ஆறு பேர் அறிமுகம் ஆகிறார்கள். ஆர்சிபி அணிக்காக இந்த வீராங்கனைகள் முதல் முறையாக விளையாடுகிறார்கள் என்றும் ஸ்மிருதி மந்தானா தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத், பனிப்பொழிவு கடும் சவால்களை அளிக்கும்.

ஆனால் போட்டி எவ்வாறு செல்கிறது என்று நாம் பார்க்க வேண்டும். இந்த போட்டிக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராக இருக்கின்றோம். அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கின்றோம். இன்று தொடக்க வீராங்கனை ஹார்லி மேத்யூஸ் உடல்நலம் சரியில்லாமல் இருக்கின்றார். இதனால் அவர் பங்கேற்கவில்லை.

இதைத்தவிர எங்கள் அணியில் நல்ல பேலன்ஸ் உடன் இருக்கின்றது.. இந்த தொடரில் இதுவரை இரு அணிகளும் ஏழு முறை மோதி இருக்கிறார்கள். இதில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி நான்கு முறையும், ஆர்சிபி மகளிர் அணி மூன்று முறையும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 9, 2026, 19:10 [IST]
Other articles published on Jan 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+