Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL 2026 கோலாகல தொடக்கம்.. மனதை கவர்ந்த முன்னாள் உலக அழகி.. ஹனி சிங் அசத்தல் இசை நிகழ்ச்சி

நவி மும்பை: மகளிர் பிரீமியர் லீக் WPL 2026-ன் நான்காவது சீசன், நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் துவங்கியது. கிரிக்கெட்டும், மனதை கொள்ளை அடிக்கும் பொழுதுபோக்கும் கலந்த இந்த சிறப்பான நிகழ்வு ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்த விழாவின் பொழுதுபோக்கு நிகழ்ச்சி இந்திய நேரப்படி மாலை 6:45 மணிக்குத் தொடங்கியது. ரசிகர்கள் முழு நிகழ்வையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாகக் கண்டுகளிக்கலாம். அதேபோல், ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கிற்காக ஜியோசினிமா செயலி மற்றும் இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

WPL Opening ceremony

இந்த தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பிரபல ராப் பாடகர் யோ யோ ஹனி சிங் ஆகியோர் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தனர். இவர்களுடன், 2021 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சந்துவும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார். ஜாக்குலின் பெர்னாண்டஸின் நடன நிகழ்ச்சி, விளையாட்டில் ஈடுபட்டுள்ள பெண்களின் தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது.

DY பாட்டீல் ஸ்டேடியத்தில் முதலில் மேடையேறிய ஹர்னாஸ் சந்து, இந்தியப் பெண்கள் நாட்டில் ஒவ்வொரு துறையிலும் எப்படி முன்னேறி, தடைகளைக் கடந்து, தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதை ஒரு உருக்கமான உரையாடலாகப் பேசினார். தனது உணர்ச்சிப்பூர்வமான உரையை முடிக்கும்போது, பார்வையாளர்களை நோக்கி "நாங்கள் தயார்" என்று அவர் முழக்கமிட்டது, பலத்த கைதட்டலைப் பெற்றது.

அவர் உரையைத் தொடர்ந்து, பாலிவுட் நட்சத்திரமான ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்தியத் திரைப்படப் பாடல்களுக்கு ஏற்ற தனது அசத்தலான நடனத்தால் மேடையை வசீகரித்தார். ஜுவென்டஸ் ஜெர்சி அணிந்து தனது நடனத்தை வெளிப்படுத்தியது கவனத்தை ஈர்த்தது. அடுத்து மேடையேறிய பிரபல ராப் பாடகர் யோ யோ ஹனி சிங், தனது சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி அரங்கத்தை அதிர வைத்தார். அவர் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்ம்ரிதி மந்தனாவுடன் இணைந்து நிகழ்ச்சியை வழங்கியது சிறப்பாக அமைந்தது..

விழாவிற்குப் பிறகு, WPL 2026 சீசனின் முதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. ஆட்டத்திற்கு முன்பே இரு அணி வீராங்கனைகளும் மைதானத்தில் தங்களது ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். டாக்டர் DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

2026 பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள்: மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ். இத்தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகள் நவி மும்பை மற்றும் வதோதரா ஆகிய இரு நகரங்களில் உள்ள மைதானங்களில் நடத்தப்படுகின்றன. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி பிப்ரவரி 5 அன்று வதோதராவில் நடைபெறும்.

Story first published: Friday, January 9, 2026, 19:32 [IST]
Other articles published on Jan 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+