Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL 2027 ஏலத்தில் சோஃபி மோலினக்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது உபி அணி

கொச்சி: மகளிர் பிரீமியர் லீக் 2027 மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது. இதில் 150 கிரிக்கெட் வீராங்கனைகள் ஏலம் விடப்படுகின்றனர். ஐந்து அணிகளில் உள்ள 27 காலியிடங்களை நிரப்ப இந்த ஏலம் நடைபெறுகிறது. இதில் 20 இடங்கள் இந்திய வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் சோஃபி மோலினக்ஸ் ரூ.1.10 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்டு இதுவரை நடந்த ஏலத்தில் அதிக விலைக்குப் போன வீரராக மாறியுள்ளார்.

இந்திய அதிரடி ஆட்டக்காரர் கிரண் நவ்கிரேவை வாங்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் அவரை ரூ.75 லட்சத்திற்கு கைப்பற்றியது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி இந்திய விக்கெட் கீப்பர் ஜி. கமலினியை ரூ.40 லட்சத்திற்கும், அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட்டை ரூ.30 லட்சத்திற்கும் வாங்கியது.

WPL 2027 auction

யுபி வாரியர்ஸ் அணி ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் சோஃபி மோலினக்ஸை ரூ.1.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததுடன், சினே ராணா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஆகியோரை தலா ரூ.30 லட்ச அடிப்படை விலையில் தேர்வு செய்தது.

IND vs NZ: அபிஷேக் சர்மா ஒன்றும் 'பிளாட் டிராக் புல்லி' கிடையாது.. ODI கிரிக்கெட்டில் சேர்க்கனும்-கையிப்

IND vs NZ: அபிஷேக் சர்மா ஒன்றும் 'பிளாட் டிராக் புல்லி' கிடையாது.. ODI கிரிக்கெட்டில் சேர்க்கனும்-கையிப்

யுபி வாரியர்ஸ் அணி அதிகபட்சமாக ரூ.3.75 கோடி இருப்புடன் ஏலத்தில் களமிறங்கியது. அந்த அணியில் 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 8 இடங்கள் காலியாக உள்ளன. குஜராத் ஜெயண்ட்ஸ் அணியிடம் 3 இடமும் கையிருப்பு ரூ.1.25 கோடியும் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் ரூ.1.15 கோடி கையிருப்பும் 5 இடங்களும் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் ரூ.1.10 கோடியும் 5 இடங்களும் கைவசம் வைத்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி மிகக் குறைந்த தொகையான ரூ.90 லட்சத்துடன் களமிறங்கியுள்ளது. மும்பை அணியில் காலியாக உள்ள 6 இடங்களும் இந்திய வீரர்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs NZ: இந்திய ஒருநாள் அணியிலிருந்து பிரபல வேகப்பந்துவீச்சாளர் விலகல்..மாற்று வீரராக ஆகிப் தேர்வு

Also Read

IND vs NZ: இந்திய ஒருநாள் அணியிலிருந்து பிரபல வேகப்பந்துவீச்சாளர் விலகல்..மாற்று வீரராக ஆகிப் தேர்வு

முதல் கட்ட ஏலத்தில் ராகவி பிஸ்ட், தேஜல் ஹசப்னிஸ், சோபியா டங்க்லி மற்றும் ஆயுஷி சோனி ஆகியோர் தற்காலிகமாக விற்கப்படவில்லை. 16 வயதான மும்பை பேட்டர் இரா ஜாதவ், மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் 157 பந்துகளில் 346 ரன்கள் குவித்து கவனம் ஈர்த்தவர் என்பதால், அன்கேப்ட் பிரிவில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 5-வது பருவம் 2027 ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறவுள்ளது.

Story first published: Wednesday, October 28, 2026, 18:14 [IST]
Other articles published on Oct 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+