For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WPL 2025 - மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் அதிக விலை போன டாப் 10 வீராங்கனைகள்

மும்பை : மகளிர் பிரீமியர் லீக் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான ஏலம் பெங்களூரில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், டெல்லி, குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய ஐந்து அணிகள் இந்த ஏலத்தில் பங்கு பெற்று வீராங்கனைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள்.


இதில் ஒவ்வொரு அணிக்கும் 15 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தமாக 19 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் 5 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடங்குவார்கள். மொத்தமாக ஒன்பது கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு இருக்கிறது.

wpl auction 2025 wpl 2025 women premier league 2025 kamini

இதில் அதிகபட்சமாக சிம்ரன் ஷேக் என்ற வீராங்கனை ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு ஏலம் சென்று இருக்கிறார். அவரை குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி வாங்கி இருக்கிறது. இவருடைய அடிப்படை விலை 10 லட்சம் ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று இந்த மினி ஏலத்தில் அதிக விலை சென்ற வீராங்கனை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த டிகே ஆந்திரா டாட் இன் வீராங்கனை டியாந்திரா டோட்டின் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் இருக்கிறார்.

50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாகக் கொண்ட டோட்டினை குஜராத் அணி வாங்கியுள்ளது. இதேபோன்று 16 வயது வீராங்கனை ஆன தமிழகத்தைச் சேர்ந்த காமினியை ஒரு கோடியே 60 லட்சம் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி இருக்கிறது. இதேபோன்று பிரேமா ராவத் என்ற வீராங்கனையை ஆர் சி பி அணி ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளது.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை சாரினி என்ற வீராங்கனையை 55 லட்சம் ரூபாய் கொடுத்து டெல்லி அணி வாங்கியிருக்கிறது. தென்னாப்பிரிக்கா வீராங்கனை நாதின் டி கிளாக் 30 லட்சம் ரூபாய் கொடுத்து மும்பை அணி வாங்கி இருக்கிறது. இங்கிலாந்து வீராங்கனை டேனியல் கிப்சனை 30 லட்சம் ரூபாய் கொடுத்து குஜராத் அணி வாங்கியுள்ளது.

இதேபோன்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஆலானா கிங்கை 30 லட்சம் ரூபாய் கொடுத்து உத்தர பிரதேச அணி வாங்கியுள்ளது. இதேபோன்று அக்ஷிதா மகேஸ்வரி என்ற ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் வீராங்கனையை மும்பை இந்தியன்ஸ் அணி 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. ராக்வி பிஸ்ட் என்ற வீராங்கனையை 10 லட்சம் ரூபாய் கொடுத்து ஆர் சி பி அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.

Story first published: Sunday, December 15, 2024, 20:45 [IST]
Other articles published on Dec 15, 2024
English summary
WPL Auction 2025- Top 10 Buys in this auction- simran shaik tops the list மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் அதிக விலை போன டாப் 10 வீராங்கனைகள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+