Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL auction 2026: அதிக விலைக்கு செல்லப்போகும் 4 வீராங்கனைகள் யார்?

டெல்லி: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு இந்த ஏலம் நடக்க இருக்கின்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 277 வீராங்கனைகள் தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் 83 வெளிநாட்டு வீராங்கனைகள் அடங்கும்.

இந்த மினி ஏலம் மூலம் 73 வீராங்கனைகளுக்கான இடம் நிரப்பப்பட இருக்கிறது. இதில் 23 வீராங்கனைகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த மினி ஏலத்தில் மார்க்கியூ பட்டியல் எனப்படும் அதிக விலை நிர்ணயிக்கப்பட்ட வீராங்கனை பட்டியலில் 8 பேர் இருக்கிறார்கள்.

WPL Auction 2026

இதில் இந்தியாவின் தீப்தி சர்மா, ரேணுகா சிங், சோபி எக்லெஸ்டோன், அலிசா ஹெலி உள்ளிட்ட வீராங்கனைகள் உள்ளனர். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக உத்திர பிரதேச அணியிடம் 14 கோடியே 50 லட்சம் ரூபாயும், குஜராத் ஜெயின்ஸ் அணியிடம் 9 கோடி ரூபாயும், rcb அணியிடம் ஆறரை கோடி ரூபாயும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 5.75 கோடி ரூபாயும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 5 கோடியே 70 லட்சம் ரூபாயும் உள்ளது.

இந்த மினி ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய வீராங்கனைகள் யார் என்று தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா இருக்கின்றார் கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் பேட்டிங்கில் 215 ரன்கள், பந்துவீச்சில் 22 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி இருந்தார். இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் 58 ரன்களும் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி இருந்தார்.

இதனால் தீப்தி சர்மா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதனால் அவர் அதிக விலைக்கு செல்வார் என எதிர்பார்க்கலாம். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் கேப்டன் லாரா வோல்வார்ட் இருக்கின்றார். இவர் கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் விளையாடி 571 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் இரண்டு சதம், மூன்று அரை சதம் அடங்கும். நடப்பாண்டில் மகளிர் பிக் பேஷ் லீக்கில் லாரா வோல்வார்ட் ஆறு போட்டியில் விளையாடி 193 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 48 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 122 என்ற அளவில் இருக்கின்றது. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் இருக்கின்றார்.

கடந்த 50 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக 16 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார். சுழற் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படக்கூடிய அவர் தற்போது நடைபெற்று வரும் மகளிர் பிரிமியர் லீக் தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் அமிலா கெர் இருக்கின்றார். இவர் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பையில் 137 ரன்களும், 7 விக்கெட்டும் எடுத்திருந்தார்.

கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மும்பை அணி பட்டம் வென்ற இரண்டு சீசனிலும் அமிலா கெர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். மும்பை அணிக்காக 29 போட்டிகளில் விளையாடி 437 ரன்கள், 40 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றி இருக்கிறார். இதனால் அமிலா கெர் அதிக விலைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, November 27, 2025, 10:50 [IST]
Other articles published on Nov 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+