WPL Auction: குறைந்த பட்ஜெட் நிறைந்த தரம்.. ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆடிய மாஸ்டர் கேம்
டெல்லி: 2026 மகளிர் ஐபிஎல் மெகா ஏலத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிகக் குறைந்த கையிருப்புத் தொகையான ₹5.7 கோடியை வைத்துக்கொண்டு மிகவும் சாதுர்யமாகச் செயல்பட்டது. தென்னாப்பிரிக்க கேப்டனும், உலகின் தலைசிறந்த தொடக்க வீராங்கனையுமான லாரா வோல்வார்ட்டை வெறும் ₹1.1 கோடிக்கு வாங்கியது அந்த அணிக்குக் கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் ஆகும்.
இது தவிர, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் சினெல்லே ஹென்றியை ₹1.3 கோடிக்கும், இந்திய இளம் வீராங்கனை ஸ்ரீ சரணியை அதே ₹1.3 கோடிக்கும் வாங்கி அணியின் நடுவரிசையை பலப்படுத்தியுள்ளது.

டெல்லி அணி ஏலத்திற்கு முன்பே தனது பலமான 'கோர்' அணியைத் தக்கவைத்திருந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, அனாபெல் சதர்லேண்ட் மற்றும் மரிசான் காப் போன்ற சர்வதேச நட்சத்திரங்கள் ஏற்கனவே அணியில் தக்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் தற்போது அனுபவச் சுழற்பந்து வீச்சாளர் ஸ்னேஹ் ரானா (₹50 லட்சம்) மற்றும் அதிரடி விக்கெட் கீப்பர் லிஸெல்லே லீ (₹30 லட்சம்) ஆகியோர் மிகக் குறைந்த விலையில் கிடைத்திருப்பது டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டையும் சமபலமாக்கியுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) முழு அணி விவரம்:
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்:
ஜெமிமா ரோட்ரிக்ஸ் - பேட்ஸ்மேன் - ₹2.20 கோடி
ஷஃபாலி வர்மா - பேட்ஸ்மேன் - ₹2.20 கோடி
மரிசான் காப் - ஆல்ரவுண்டர் - ₹2.20 கோடி
அனாபெல் சதர்லேண்ட் - ஆல்ரவுண்டர் - ₹2.20 கோடி
நிக்கி பிரசாத் - ஆல்ரவுண்டர் - ₹50.00 லட்சம்
ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கனைகள்:
பேட்டர்கள்:
லாரா வோல்வார்ட் - ₹1.10 கோடி
தியா யாதவ் - ₹10.00 லட்சம்
ஆல்-ரவுண்டர்கள்:
சினெல்லே ஹென்றி - ₹1.30 கோடி
நல்லாபுரெட்டி ஸ்ரீ சரணி - ₹1.30 கோடி
ஸ்னேஹ் ரானா - ₹50.00 லட்சம்
மின்னு மணி - ₹40.00 லட்சம்
லூசி ஹாமில்டன் - ₹10.00 லட்சம்
விக்கெட் கீப்பர்கள்:
லிஸெல்லே லீ - ₹30.00 லட்சம்
தானியா பாட்டியா - ₹30.00 லட்சம்
மமதா மடிவாலா - ₹10.00 லட்சம்
பந்துவீச்சாளர்கள்:
நந்தினி சர்மா - ₹20.00 லட்சம்


Click it and Unblock the Notifications