Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL 2026 ஏலத்தில் ஸ்டார் வீராங்கனைகளை வாங்கி குவித்த குஜராத் ஜெயண்ட்ஸ்.. முழு அணி விவரம்

டெல்லி: 2026 மகளிர் ஐபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி அதிரடியாக சிறந்த வீராங்கனைகளை வாங்கி உள்ளது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வாங்கிய வீராங்கனைகள் மற்றும் தக்க வைத்தவர்கள் பட்டியலையும், அந்த அணியின் ஏல திட்டத்தையும் காணலாம்.

கடந்த சீசன்களில் புள்ளிப்பட்டியலில் பின்தங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி, இம்முறை ஏலத்தில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து புத்துயிர் பெற்றுள்ளது. நியூசிலாந்தின் அதிரடி வீராங்கனை சோஃபி டிவைனை ₹2 கோடிக்கு வாங்கியது அந்த அணியின் முக்கிய வியூகமாக இருந்தது. இது தவிர, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஜார்ஜியா வேர்ஹாம் ₹1 கோடிக்கும், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் ₹60 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளனர்.

Gujarat Giants

குஜராத் அணி ஏற்கனவே ஆஷ்லே கார்ட்னர் மற்றும் பெத் மூனி ஆகிய இரண்டு முக்கிய வீராங்கனைகளை தக்கவைத்திருந்தது. இவர்களுடன் தற்போது அனுபவமிக்க யாஸ்திகா பாட்டியா, டேனியல் வியாட் மற்றும் கிம் கார்த் ஆகியோர் இணைந்திருப்பது அணியை மிகவும் பலப்படுத்தியுள்ளது.

பார்தி ஃபுல்மாலி, காஷ்வி கௌதம் மற்றும் தனுஜா கன்வர் போன்ற திறமையான உள்ளூர் வீராங்கனைகளையும் அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதன் மூலம், இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் குஜராத் களமிறங்குகிறது.

குஜராத் ஜெயண்ட்ஸ் முழு அணி விவரம்:

தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்:
ஆஷ்லே கார்ட்னர் - ஆல்ரவுண்டர் - ₹3.50 கோடி
பெத் மூனி - விக்கெட் கீப்பர் - ₹2.50 கோடி

ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கனைகள்:

பேட்டர்கள்:

பார்தி ஃபுல்மாலி - ₹70.00 லட்சம்
டேனியல் வியாட்-ஹார்ஜ் - ₹50.00 லட்சம்

ஆல்-ரவுண்டர்கள்:

சோஃபி டிவைன் - ₹2.00 கோடி
ஜார்ஜியா வேர்ஹாம் - ₹1.00 கோடி
காஷ்வி கௌதம் - ₹65.00 லட்சம்
கிம்பர்லி கார்த் - ₹50.00 லட்சம்
தனுஜா கன்வர் - ₹45.00 லட்சம்
அனுஷ்கா சர்மா - ₹45.00 லட்சம்
கனிகா அஹுஜா - ₹30.00 லட்சம்
ஆயுஷி சோனி - ₹30.00 லட்சம்

விக்கெட் கீப்பர்கள்:

யாஸ்திகா பாட்டியா - ₹50.00 லட்சம்
சிவானி சிங் - ₹10.00 லட்சம்

பந்துவீச்சாளர்கள்:

ரேணுகா சிங் - ₹60.00 லட்சம்
ராஜேஸ்வரி கெய்க்வாட் - ₹40.00 லட்சம்
டைடாஸ் சாது - ₹30.00 லட்சம்
ஹேப்பி குமாரி - ₹10.00 லட்சம்

Story first published: Thursday, November 27, 2025, 21:47 [IST]
Other articles published on Nov 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+