Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL ஏலத்தில் தாறுமாறு டீமை வாங்கிய ஆர்சிபி.. முழுதாக நட்சத்திர வீராங்கனைகள் அடங்கிய அணி பட்டியல்

புதுடெல்லி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ('RCB') அணி 2026 மகளிர் ஐபிஎல் மெகா ஏலத்தில் தனது பந்துவீச்சு மற்றும் ஆல்-ரவுண்டர் வரிசையை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியது. அந்த அணி வாங்கிய வீராங்கனைகள் யார், யார், தக்க வைத்தவர்கள் யார்? உள்ளிட்ட முழு அணி பட்டியலை பார்க்கலாம்.

2026 மகளிர் ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் லாரன் பெல் ஆர்சிபி அணியின் மிக விலையுயர்ந்த தேர்வாக அமைந்தார். அவரை ₹90 லட்சத்திற்கு ஆர்சிபி வாங்கியது. இந்திய ஆல்-ரவுண்டர் பூஜா வஸ்த்ரகரை ₹85 லட்சத்திற்கும், ஆஸ்திரேலியாவின் அதிரடி வீராங்கனை கிரேஸ் ஹாரிஸை ₹75 லட்சத்திற்கும் வாங்கி அணியின் நடுவரிசையை பலப்படுத்தியுள்ளது. அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் போன்ற இந்திய வீராங்கனைகளும் ஆர்சிபி அணியில் இணைந்துள்ளனர்.

WPL Auction 2026 RCB team complete Squad details with retained and bought players

ஏலத்திற்கு முன்னரே, ஆர்சிபி தனது ரசிகர்களின் விருப்பத்திற்குரிய முக்கிய நட்சத்திரங்களைத் தக்கவைத்திருந்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா (₹3.5 கோடி), விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் (₹2.75 கோடி), உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர் எலிஸ் பெரி (₹2 கோடி) மற்றும் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் அணியில் தக்கவைக்கப்பட்டனர்.

இந்த வலுவான அடித்தளத்துடன், தற்போது லாரன் பெல், பூஜா வஸ்த்ரகர் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் போன்ற 'மேட்ச் வின்னர்கள்' இணைந்திருப்பது, மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி-யின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) முழு அணி விவரம்:

தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்:

ஸ்மிருதி மந்தனா - பேட்ஸ்மேன் - ₹3.50 கோடி
ரிச்சா கோஷ் - விக்கெட் கீப்பர் - ₹2.75 கோடி
எலிஸ் பெரி - ஆல்ரவுண்டர் - ₹2.00 கோடி
ஷ்ரேயங்கா பாட்டீல் - ஆல்ரவுண்டர் - ₹60.00 லட்சம்

ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கனைகள்:

பேட்டர்கள்:

ஜார்ஜியா வோல் - ₹60.00 லட்சம்

ஆல்-ரவுண்டர்கள்:

பூஜா வஸ்த்ரகர் - ₹85.00 லட்சம்
கிரேஸ் ஹாரிஸ் - ₹75.00 லட்சம்
அருந்ததி ரெட்டி - ₹75.00 லட்சம்
நரைன் டி கிளர்க் - ₹65.00 லட்சம்
ராதா யாதவ் - ₹65.00 லட்சம்
டி. ஹேமலதா - ₹30.00 லட்சம்
பிரேமா ராவத் - ₹20.00 லட்சம்
கௌதமி நாயக் - ₹10.00 லட்சம்

பந்துவீச்சாளர்கள்:

லாரன் பெல் - ₹90.00 லட்சம்
லின்சி ஸ்மித் - ₹30.00 லட்சம்

விக்கெட் கீப்பர்:

பிரத்யூஷா குமார் - ₹10.00 லட்சம்

Story first published: Thursday, November 27, 2025, 21:48 [IST]
Other articles published on Nov 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+