WPL Auction: ஏலத்தின் கிங் மேக்கர்.. மொத்தமாக அணியை மாற்றிய உபி வாரியர்ஸ்.. முழு அணி விவரம்
டெல்லி: 2026 மகளிர் ஐபிஎல் (WPL) மெகா ஏலத்தில், அதிக கையிருப்புத் தொகையுடன் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி வாங்கிய வீராங்கனைகளின் பட்டியல் மற்றும் முழு அணியையும் பார்க்கலாம். உபி வாரியர்ஸ் அணி 2026 மகளிர் ஐபிஎல் மெகா ஏலத்தின் போக்கையே மாற்றியமைத்தது. இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவை டெல்லி அணி வாங்க முயன்றபோது, விடாமல் போட்டிபோட்டு ₹3.2 கோடிக்கு 'RTM' ('Right to Match') கார்டு மூலம் தக்கவைத்தது.
இதுதவிர, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டேவை ₹2.4 கோடிக்கும், ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் மெக் லானிங்கை ₹1.9 கோடிக்கும் வாங்கி அணியின் தரத்தை உயர்த்தியுள்ளது. உலகின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளரான சோஃபி எக்லெஸ்டோனை வெறும் ₹85 லட்சத்திற்கு RTM மூலம் எடுத்தது அந்த அணியின் மிகச்சிறந்த வியூகமாக பார்க்கப்படுகிறது.

ஆச்சரியப்படும் விதமாக, ஏலத்திற்கு முன்பே இந்த அணி ஸ்வேதா செஹ்ராவத் (₹50 லட்சம்) என்ற ஒரே ஒரு இளம் வீராங்கனையை மட்டுமே தக்கவைத்திருந்தது. இதனால் அணியை மொத்தமாக மாற்றியமைக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, தீப்தி சர்மா, மெக் லானிங், ஃபீபி லிட்ச்பீல்ட், டியான்ட்ரா டாட்டின் என ஒரு புதிய சாம்பியன் அணியையே உபி வாரியர்ஸ் உருவாக்கிவிட்டது.
உபி வாரியர்ஸ் (UP Warriorz) முழு அணி விவரம்:
தக்கவைக்கப்பட்ட வீராங்கனை:
- ஸ்வேதா செஹ்ராவத் - பேட்ஸ்மேன் - ₹50.00 லட்சம்
ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கனைகள்:
பேட்ஸ்வுமன்கள்:
- மெக் லானிங் - ₹1.90 கோடி
- ஃபீபி லிட்ச்பீல்ட் - ₹1.20 கோடி
- கிரண் நவ்கிரே - ₹60.00 லட்சம்
- சிம்ரன் ஷேக் - ₹10.00 லட்சம்
ஆல்-ரவுண்டர்கள்:
- தீப்தி சர்மா - ₹3.20 கோடி (RTM)
- ஷிகா பாண்டே - ₹2.40 கோடி
- டியான்ட்ரா டாட்டின் - ₹80.00 லட்சம்
- ஹர்லீன் தியோல் - ₹50.00 லட்சம்
- பிரதிகா ராவல் - ₹50.00 லட்சம்
- குளோயி ட்ரையான் - ₹30.00 லட்சம்
- ஜி. த்ரிஷா - ₹10.00 லட்சம்
- தாரா நோரிஸ் - ₹10.00 லட்சம்
- சுமன் மீனா - ₹10.00 லட்சம்
பந்துவீச்சாளர்கள்:
- ஆஷா சோபனா - ₹1.10 கோடி
- சோஃபி எக்லெஸ்டோன் - ₹85.00 லட்சம் (RTM)
- கிராந்தி கவுட் - ₹50.00 லட்சம்
விக்கெட் கீப்பர்:
- ஷிப்ரா கிரி - ₹10.00 லட்சம்


Click it and Unblock the Notifications