பெங்களூரு : மகளிர் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆர் சி பி அணி கைப்பற்றி இருப்பது தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேச்சுப் பொருளாக இருக்கிறது. ஆர்சிபி ஆடவர் அணிகளால் முடியாத ஒரு காரியத்தை மகளிர் அணி எப்படி சாதித்தது என்பதை இந்த ஒரு நிகழ்வின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆர் சி பி ஆடவர் அணியில் விராட் கோலி இருந்தும், அந்த அணியால் ஒரு முறை கூட ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதில்லை. இதற்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

விராட் கோலி என்ற தனிநபரால் சதம் சதமாக எடுக்க முடிந்தாலும் கூட மற்ற வீரர்களின் துணை இல்லை என்றால் ஆர் சி பி அணியால் கோப்பையை வென்று தர முடியாது.
என்பதுதான். ஒரு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என மூன்றுமே ஒருங்கிணைந்து விளையாட வேண்டும். ஆட்டத்தை தனி ஆளாக மாற்றக்கூடிய வீரர்கள் அந்த அணியில் இடம் பெற வேண்டும்.
இது எல்லாம் தற்போது ஆர் சி பி மகளிர் அணிக்கு கிடைத்திருக்கிறது. ஆர் சி பி ஆடவர் அணியில் இருக்கும் குறையே அந்த அணியின் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பவுலர்கள் இல்லை என்பதுதான். ஆனால் ஆர் சி பி மகளிர் அணியில் பவுலர்கள் தான் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். சொல்லப்போனால் நடப்பு மகளிர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் டாப் மூன்று இடத்திலுமே ஆர்சிபி வீராதனைகள் தான் இருக்கிறார்கள்.
ஸ்ரேயங்கா பாட்டில் 13 வீக்கெட்டுகளையும், ஆஷா ஷோபனா 12 விக்கெட்களும், சோபி 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆர்.சி.பி அணையின் வெற்றிக்கு வித்திட்டு இருக்கிறார்கள். இறுதி போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்ரேயங்கா பர்பிள் நிற தொப்பியை வென்றிருக்கிறார். இதேபோன்று அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியும் ஆர் சி பி பேட்டருக்கு தான் கிடைத்திருக்கிறது.
ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லைஸ் பெர்ரி, இந்த விருதை வென்றிருக்கிறார். இது மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் சிறந்த வீராங்கனை ஆக ஆர் சி பி அணியின் பிரியங்கா பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விதிகளைப் பின்பற்றி நன் மதிப்புடன் விளையாடும் பேர் பிலே விருதும், ஆர் சி பி அணி தான் வென்று இருக்கிறது. இப்படி பல விருதுகளை அந்த அணி தட்டி சென்று இருக்கிறது.