WPL Auction: ரூ.40 லட்சத்திற்கு வாங்கப்பட்ட மதுரை வீராங்கனை.. குஜராத் அணிக்கு சென்ற கமாலினி!
கொச்சி: மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலத்தில் மதுரையை சேர்ந்த ஜி கமாலினி ரூ.40 லட்சத்திற்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் மும்பை அணியால் ரூ.1.6 கோடிக்கு வாங்கப்பட்ட கமாலினி, இம்முறை ரூ.40 லட்சத்திற்கு மட்டும் வாங்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது.
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் மதுரையைச் சேர்ந்த வீராங்கனையான ஜி கமாலினி குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியால் ரூ.40 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.1.6 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டிருந்தார். ஆனால் இந்த மினி ஏலத்திற்கு முன் கமாலினி ரிலீஸ் செய்யப்பட்டிருந்தார்.

மும்பை அணிக்காக 2 சீசன்களாக விளையாடியுள்ள கமாலினி 14 போட்டிகளில் விளையாடி 107 ரன்களை குவித்துள்ளார். அதிக எதிர்பார்ப்புடன் வாங்கப்பட்ட கமாலினி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், அவர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான கமாலினி குஜராத் அணியில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே யு19 டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீராங்கனைகளில் கமாலினியும் ஒருவர். இதனால் கமாலினி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் சமைரா ராகவ், ஆல்ரவுண்டர் ஓர்லா ஆகியோரையும் குஜராத் அணி நிர்வாகம் வாங்கி இருக்கிறது. இதனால் குஜராத் அணியின் பலம் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
