மகளிர் பிரீமியர் லீக் தொடர் - வெளியேறியது ஆர்சிபி.. கொஞ்சம் கூட அதிர்ஷ்டம இல்ல.. ரசிகர்கள் பாவம்
மும்பை : மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து முதல் அணியாக ஆர்சிபி மகளிர் அணி வெளியேறியது. ஆடவர் சாதிக்காததை மகளிர் அணி சாதிக்கும் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. சிறப்பான வீராங்கனையாக அறியப்பட்ட ஸ்மிருதி மந்தானா, ஆர்சிபிக்கு வந்த உடனே மோசமாக விளையாட தொடங்கிவிட்டார்.
8 போட்டிகளில் விளையாடிய ஸ்மிருதி, வெறும் 149 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். சராசரி வெறும் 18 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 112 என்ற அளவில் தான் உள்ளது. இதில் 7 முறை சுழற்பந்துவீச்சாளரிடம் மந்தானா ஆட்டமிழந்தார்.

5 தோல்வி
7 போட்டிகளில் விளையாடி வெறும் 2 போட்டியில் மட்டுமே வென்ற ஆர்சிபி மகளிர் அணி, இன்று கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையை எதிர்கொண்டது. வெற்றி பெற்று கௌரவமாக ஆர்சிபி வெளியேறும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் மண்ணை கவ்வியது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசியது.

ஆட்டமிழப்பு
இதனையடுத்து கடந்த போட்டியில் 99 ரன்கள் விளாசிய சோபி டிவைன் இன்றைய ஆட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். நிதானமாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா 24 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய விராங்கனை எலிசா பெர்ரி 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

125 ரன்களுக்கு அவுட்
ஹெத்தர் நைட் , கணிகா தலா 12 ரன்களிலும், ஆட்டமிழக்க ரிச்சா கோஷ் 29 ரன்கள் சேர்த்தார். ஆனால் அதன் பிறகு விளையாடிய அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் பெங்களூரு அணி 9 விக்கெட்டு இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.

மும்பை வெற்றி
இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ஹெலி மெத்தீவ்ஸ் 24 ரன்களிலும், யாஷ்திகா பாட்டியா 30 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஹர்மன்பிரீத் 2 ரன்களில் வெளியேற, அமீலா கெர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார். இதனால் மும்பை மகளிர் அணி 129 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்யை தழுவியது. இதன் மூலம் தொடரை விட்டு பெங்களூரு வெளியேறிய நிலையில், அடுத்த சீசனில் சிறப்பாக விளையாடுவோம் என அவர் நம்பிக்கை கூறினார்.


Click it and Unblock the Notifications